பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. வாழ்க்கையை வாழ்த்துவோம்! இறைவனும் இயற்கையும் இறைவன் நமக்கு அளித்ததை இயற்கை என்கிருேம். அந்த இயற்கையின் வழியைப் பின்பற்றுவதையே இனிய வழி என்கிருேம். அந்த இனிய வழியில் ஒழுகும் முதிர்ச்சியையே ஒழுங்கு என்கிருேம். ஒழுங்கினைப் பெரிதும் போற்றி வாழும் அமைப்பினைப் பண் பாடு என்கிருேம். பண்பாட்டின் நிலைக்களனகவே ஒவ்வொரு மனிதனும் வாழவேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமும் ஆகும். அந்த விருப்பத்திற்கிணங்க வாழும் வாழ்க்கை தான் மேலான வாழ்க்கை என்று மேலோர் விளக்குகிரு.ர்கள். மலையில் நீருற்று சுரக்கிறது. சலசலக்கும் அலையெழுப்பி ஆடும் சுனையாகிறது. சுனை வளர்ந்து, தணிந்து ஒடி மலை உச்சியிலிருந்து வெள்ளி நாராக வீழ்ந்து அருவியாகிறது. துள்ளி ஒடி சிற் சீருடையாகிறது. சிற் ருேடை ஆருகி பினனர் பெரும் நதியாக மாறி, இறுதியிலே கடலோடு சென்று கலந்து மறைகிறது.