பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10


மனித வாழ்வின் அமைப்பும் சற்றேறக் குறைய நீருற்று போல்தான். சுனே போன்ற மழலை. துள்ளிவிழும் அருவியென இளமை நதியென முதுமை. கடலோடு நதிகலப்பது போல கடைசிப் பயணம். இவ்வாறு வாழ்வுக் கோலம் எல்லாம். சுகமும் சுவையும், சுமையும் மீற மீற. வளையம் வருகிறது. மழலையில் தொடங்கி, இளமையில் ஓங்கி, முதுமையில் ஒடுங்கி, இறுதியில் தியங்கி இறப்புடன் கலக்கும், இடைக் காலத்தில் நிகழ்கின்ற எல்லா நிகழ்ச்சிகளின் தொகுப்பைத் தான் வாழ்க்கை என்று அழைக்கிருேம். உயிரும் உயர்வும் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் தன்னையறியாது வளர் கிறது. வாழ்கிறது. மறைகிறது. இதுதான் இயற்கை. இயற்கை வழியாகவே வாழ்க்கை நடக்கிறது. இயற்கை ஒழுங்கின் வழியாகவே, வாழ்க்கை ஒழுங்கும் அமைகிறது. தென்றல் தவழ்கிறது. நிலவு ஒளி தருகிறது. பரிதி காய்கிறது. எல்லாம் இயற்கையின் இனிய போக்கு. அதனதன் கடமை. மனிதனும் அவ்வாறு வாழ்ந்து செல்வது தான் மனித வாழ்க்கையின் குறிக்கோளாகும். வாழ்க்கை என்பது ஒரு தீராத பிரச்சினை என்று மனிதர்கள் பேசுகின்ருர்கள். உண்மையிலே வாழ்வு என்பது பிரச்சினையல்ல. அது ஒரு இனிய மலர்ச்சோலை. பனிமலர்த் தடாகம். பளிங்கு மண்டபம். பல்சுவைக் களஞ்சியம். செப்பனிட்ட சீரான பாதையிலே நேராகச் செல்ப வனுக்கு வழி சுலபம். நடை சுலபம். முடிவும் சுகமே. சிக்கல் நிறைந்த குறுக்கு வழியில் செல்பவன் காலடியில், கல்லும் முள்ளும், மேடும் பள்ளமும், நச்சுப் பூச்சிகளும் நயவஞ்சகப் பிராணிகளும் எதிர்ப்படுவதும், அதல்ை இடர்ப்படுவதும்