பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11


இயல்புதானே! இன்னல் ஏன் வருகிறது என்ருல், அங்கே எண்ணம் சரியில்லை என்பதுதானே பொருள்! ஆகவே வாழ்க்கைக்குரிய வழியானது நேர்வழியே தவிர, மாறு வழி அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நேர்வழி என்பது நெஞ்சத்திற்கு ஆகாரமானது. ஆதாரமானது. அன்புக்கு ஆதார சுருதியானது. ஆனந்த லயமானதுங்க.ட. 'தன்னையறிந்தவன் தலைவன்’ என்பது போல, தன்னை இறைவனுகச் செய்வானுந்தானேதான், தன்னை சிறுவகைச் செய்வானுந்தான்’ என்று அறநெறிச்சாரம் கூறுவது போல, தானே தன் இனிய வாழ்க்கையின் முன்னேடி என்பதை ஒவ்வொருவரும் உணாந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒருபால் திருத்த ஒரு பால் கிழியும் பெருவாழ்க்கை முத்தாடை என்று நீதிவெண்பா கூறும். ஒன்று முடிந்து விட்டது என்று அமைதியும் ஆனந்தமும் அடைகின்ற நேரத்தில், நமக்குத் தேவையில்லாத, நாம் நினைக்காத இன்னென்று நடந்து, நம்மைத் திகைக்க வைப்பதுதான் வாழ்க்கை! அதல்ைதான், மனிதன் அறிவுடன் வாழ வேண்டும் என்று அறிஞர்கள் வற்புறுத்துகின்ருர்கள். அறிவுடையவன் என்பவன் யார்? அவன் எப்படி செயல்படுகிருன்? அறிவுடை யவன் என்பவன், தான் வாழ்ந்து கொண்டிருக்கும் நிகழ் காலத்தை நுகர்கிருன். கற்பனையில் அவன் வாழ்வதில்லை. இறந்த காலத்தில் அவன் பெற்ற அனுபவங்களை எண்ணிப் பார்க்கிருன். அந்த அனுபவ அறிவை ஆனந்த