பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிதியாக ஏற்றுக் கொள்கிருன். அதை வைத்துக் கொண்டு, வருங்காலத்திற்காகத் திட்டமிடுகிருன். தீர்மானிக்கருன், திறமையோடு உழைக்கிருன். பெருமையோடு பிழைக்கிருன். வாழ்க்கை என்பது முடிவுரு த ஒரு சரித்திரத் தொடர் கதை. அந்த சரித்திரக் கதையில், எந்த நேரத்தில் என்ன நேரும்? பகை எப்படி சூழும்? விடிவு எங்ங்ணம் தோன்றும்? முடிவு எப்படி நிகழும் என்று யாருக்குமே தெரியாது. இருட்டறையில் கறுப்புப் பூனையைத் தேடும், நிலைதான். அத்தகைய நிலையில், நாம் என்ன செய்ய வேண்டும்? எதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். எதையும் ஏற்கவும், எப்படி வந்தாலும் ஏற்று செயல்படவும் தயாராக இருக்க வேண்டும். வாழ்க்கை என்பது ஒரு நாடகமேடை நாடகமேடை யில், ஒருவன் நடிக்கும் போது நன்ரு கப் பாராட்டப்படு: கிருன் என்ருல்,அது அவனுடைய உழைப்பின் திறத்தையும்: ஊக்கத்தின் அளவையும், விடாமுயற்சியில் அடைந்த வளத்தையுமே காட்டுகிறது. அதுபோலவே வாழ்க்கை யென்னும் மேடையிலே, எல்லோருமே நடிக்க வந்தவர்கள்தான். இதில் எல்லோருமே கதாநாயகனக கதாநாயகியாக மாறிவிட முடியாது. என்ருலும், எல்லோரும் ஏதோ ஒரு பாத்திரத்தை ஏற்று நடித்துத்தான் ஆக வேண்டும். மேடைக்கு வந்தாகிவிட்டது. நடித்தே ஆகவேண்டும்' என்ற நிலே வந்த பிறகு, என்னல் முடியாது, எனக்குத் தெரியாது’ என்று திரைமறைவிற்கு ஒடுவது கோழைத் தனம், கடைந்தெடுத்தப் பயங்கொள்ளித்தனம். வந்து விட்டோம் மேடைக்கு. முடிந்தவரை நடிப்போம். வெற்றி பெற முயற்சிப்போம். இவ்வாறு முயல்பவனே வீரன். விவேகி. வித்தகன்.”