பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121


எந்த நிலையையும் ஏற்றுக்கொண்டு செயல்படுகின்ற, திட ப்படுத்திக் கொள்கின்ற மனவலிமை தான் முதலில் வேண்டும். நம்மை நாமே திடப்படுத்திக் கொண்டு வாழ் வதே சிறப்புடமை. அதுவே அறிவுடமையுமாகும். அன்ருட நமது வாழ்க்கையில் அடுத்தடுத்து தோல்வி கள் நேரலாம். எதிர்பாராத இன்னல்கள் நிகழலாம். எதிர்ப் பார்த்த இன்பம் கிடைக்காமல் போகலாம். கவலை என்று மயங்கி நிற்கும் பொழுது களிப்பும் தோன்றலாம். இதெல்லாம் இயற்கையே. அதற்காக தன்னையே நொந்து கொள்வதோ, முடியாது இனிமேல் என்று மூலையில் போய் குந்திக் கொள்வதோ, மனிதர்களுக்கு அழகல்ல. எதையும் சந்திக்கும் இதயத்தைப் பெற்று வாழவேண்டும். இதற்குத்தான் பயிற்சியைக் கொள்ள வேண்டும். முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும். ஆடுகளத் தினுள் நுழைந்த ஒருவர் ஆடுகின்ருர் என்ருல், எந்த நேரத்தில் என்ன நிகழும் என்று யாராலுமே கூற முடியாது, ஆட்டத்தை ஆடித் தொடர வேண்டியது அவரது கடமை. அதற்காக உடலையும் உள்ளத்தையும் ஆயத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான். தனக்குரிய திறமையையும், தேகத்தின் வலிமையையும் எப்பொழுது எப்படி பயன்படுத்த வேண்டும் என்று சந்தர்ப்பத்திற்காகத் தன்னைத் திடப்படுத்திக் கொண்டு ஆடும் ஆட்டக்காரர்களைப் போலத்தான், வாழ்க்கை சூழ் நிலையும் அமைகிறது. வாழ்க்கையே சந்தர்ப்பத்தின் ஆளுகையில் தான் சென்று கொண்டிருக்கிறது. சந்தர்ப்பம் வரும் என்றுசிலர் காத்துக்கொண்டிருப்பார் கள். சந்தர்ப்பம் வரும்பொழுது பாராமுகமாகவோ அல்லது, 8