பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122


சோம்பலாகவே, இருந்தும் விடுவார்கள். வந்த சந்தர்ப் பத்தை வசப்படுத் திக்கொள்ளாவிட்டால் மீண்டும் வராது. ஆகவே, கவனத்துடனும் கலையாத திண்மையுடனும் இருக்க, எப்பொழுதும் திடமாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும். எதிர் ஆட்டக்காரர்களை எதிர்த்தாடி சமாளிப்பது போலவே, வாழ்க்கை நீரோட்டத்திலும் எதிர் நீச்சல் போட்டாக வேண்டும். சந்தடி நிறைந்தது மட்டும் சமுதாயம் அல்ல. ச்சரவும் நிறைந்த ஒன்ரு கும். அதை சமாளிக்கும் திறனை , ஆடுகளம் மிக அருமையாக கற்பித்துத் தருகிறது விளையாடும் பொழுது. நலிபவர்களைக் கண்டு உலகம் நையாண்டி செய்யும். முன்னேற முயல்பவர்களைக் கண்டு நகைத்து முட்டுக்கட்டை போடும். இது உலக இயல்பு.

ஆகவே, இறுதி வரை விளையாடியே தீர வேண்டும் என்று தளராமல் திகைக்காமல் விளையாடுவது போல, எந்த நிலை வந்தாலும் சிந்தை தளராமல், எடுத்த கருமத்தைத் தொடுத்து, வெற்றி தோல்வி எது வந்தாலும் ஒரு கை பார்த்து விடுவது என்று போராடும் திடமும் தெளிவும் வேண்டும், வாழ்க்கைப் பந்தயத்திற்கு இந்த தன்னம்பிக்கையும் தளராத செயலூக்கமும் நிச்சயமாகத் தேவைதான். 3. தோல்வியும் கேள்வியும் எந்தப் பணியையும் அல்லது செயலையும் தொடங் கிலுைம், மகிழ்வாகவே நாம் தொடங்குகிருேம், அந்த செயலானது இறுதியை அடையும் பொழுது ஏதோ ஒரு மூடிவுடன் நின்று விடுகிறது. அது நமக்கு சாதகமாக அதாவது வெற்றிகரமாகவோ, பாதகமாக அதாவது தோல்விகரமாகவோ அமையலாம்.