பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டிற்கு வேண்டிய திறமைகளில் அதிகப் பயிற்சி இல்லாமை, பயிற்சி இருந்தும் பழக்கம் இல்லாத நிலைமை; பழக்கம் இருந்தும் பயத்தினல் செயலாற்ற முடியாத கொடுமை; சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளத் தெரியாத அனுபவமின்மை; இதற்கும் மேலே , எதிர்த்தாடுபவர்கள் நிறைந்த திறமைசாலிகளாகவும் இருந்திருக்கலாம். ஆகவே, சிந்திப்போன பாலேம் பற்றி சிந்திக்காதே. என்பது போல இருக்காது, சிந்திப் போன வெற்றி, ஏன் சிந்திப் போனது என்று நாம் சிந்திக்க வேண்டும். நிகழ்ச்சி களை சீர்தூக்கிப் பார்த்திட வேண்டும். எல்லா நிலைமை களையும் நிதானமாகப் பரிசீலிக்க வேண்டும். பாரபட்ச மின்றி இரு குழுக்களின் திறமைகளை பொருத்திப் பாத்திட வேண்டும். எந்த இடத்தில் தவறுகள் இருந்தன, எங்கு வந்து பல ஹீ க்கள் தடுத்தன, எதிரிகளின் தாக்குதல்கள் அடி. கொடுத்தன. எங்கே தவறுகள் முயற்சிகளை தடுத்த என்று எண்ணித் தெளிவதில் தான் அனுபவங்கள் முழுமை பெறு கின்றன. அப்பொழுதுதான் தோல்விகள் வெற்றிக்கும் படிகளாகவும் அமைகின்றன. தோல்வியைக் கண்டு எல்லா நிலையிலுள்ள மக்களும் பயப்படுவதும், "ஆகா ஒகோ என்று துயரப்படுவதும் இயற்கைதான். தோல்வியைக் கண்டு தயங்குவதும், மயங்கு வதும் வேண்டாத குளுதிசயமாகும் . மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் திறமை உண்டு. ஏதோ முடிந்த அளவு வலிமையும் உண்டு. இருக் கின்ற திறமையை வளர்த்து க் கொள்ள முடியும், வலிமையை மிகுத் துக் கொள்ளவும் முடியும். அதேபோல் தங்களிடம் உள்ள குறையை குறைத்துக் கொள்ளவும்