பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127


முடியும். அங்கே தவறை மாற்றி மறைத்து விடவும் முடியும். அத்துடன் தவறில்லாத நிறைவையும் ஏற்றிக் கொள்ளவும் முடியும். அதுபோலவே, தங்களுக்குள்ள குறையை. பலவீனத் தை தங்களால் மாற்றிக் கொள்ள முடியாது போனல் என்ன செய்வது? அதற்காகத் தவித்துத் தத்தளித்திட வேண்டாம். ஒ செய்தால் போதும். அதாவது எதிரிக்குத் தங்கள் குறையைத் தெரியாமல் மறைத்து, சமாளித்துக் கொள்வது தான். அது தான் சாமர்த்தியம் என்று அழைக்கப்படுகிறது. குறையை மறைத்து , தங்களுக்குள்ள திறமையால் எதரியைத் தாக்கும் பொழுது, அங்கே சரியான போராட்டம் நிகழ்ந்து விடுகிறது. இந்தப் பண்புதான். தன் ம்பிக்கை நிறைந்த திண்மையான மனத்தையும் தந்துவிடுகிறது, பலமான மனம் பாதி வெற்றியை அளித்து விடும் என்பதை மறந்துவிடக் கூடாது. அதற்குப் பிறகு மேற்கொள்கின்ற அ ைதியான் தொடக்கமும், திறமையான செயலும், விடாத முயற்சியும், உண்மையிலேயே வெற்றி முகாமிற்குத் தடையின்றி இட்டுச் சென்று விடும். தோல்வியைத் தவிர்க்க வேண்டும் என்று விரும்புபவர் கள் எதற்கெடுத்தாலும் கூச்சப்படக் கூடாது. நேரம் அறியாமல் காரியம் செய்யக் கூடாது. தன்னிலைக்கு மீறி தற்பெருமை கொள்ளக் கூடாது. சூழ்நிலையின் தன்மையையும் உண்மையையும், எதிரிகளின் திறமையையும் வலிமையையும், தமக்குரிய குறைகளையும் நிறைகளே யும் கண்டு, அதற்கேற்பவே செயல்படவேண்டும்.