பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இது அவசரந்தான என்ற ஒரு கேள்வியையும், இது அவசியந்தான என்று இன்னொரு கேள்வியையும் கேட்டுக் கொண்டு, அதற்குரிய பதிலாக செயல்பட்டால், பழுது படாது வெற்றி கைக்கு வந்து சேரும். வெற்றியை எதிர்பார்த்துப் போராடுவதுதான் வீரனுக்கு அழகு. வெற்றி கிடைத்தால் அது திறமைக்குக் கிடைத்த பரிசு என்று மகிழ வேண்டும். வெற்றி வி வேகத்தைத் தான் வளர்க்க வேண்டும், வெறியை வளர்க்கவே கூடாது. அந்த வெறி, வந்தவர்களை வீழ்த்தி விடும். வரலாற்றில் இழிந்த நிலைக்கு இட்டுச் சென்று விடும். பிறரது ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக்கி விடும். உண்மை திறமையை ஊரார் கண்களுக்கு மறைத்து, தாழ்ந்த நிலைமைக்கு கூட்டிச் சென்று தரங்கெட்ட பெயரையும் ஏற்படுத்தி விடும். தோல் வி பெற்று விட்டால், அதற்காகத் துவண்டு போவது பேதமை. தோல்வி ஏற்படுவது இயற்கைதான். அந்தத் தோல்வி அனுபவமும், அதனுல் கிடைக்கும் அறிவும் தான் ஒரு வரை வெற்றி வாழ்க்கையில் ஏற்றி வாழ்த்தி இருக்கின்றன. இன்று நம்மிடையே வெற்றி வீரர்களாக விளங்கு பவர் கள், வாழ்க்கையின் மேலிடத்தில் வீற்றிருப்பவர்கள் எல்லோரும் வெற்றியே பெற்று முன்னுக்கு வந்தவர்கள் அல்லர், அவர்களும் வெள்ளத்தில் விழுந்த துரும்பு அலேகளுக்கிடையே அலேக்கழிக்கப்படுவது போல. அலேக் கழிக்கப்பட்டு வாழ்நாளில் கரையேறி வந்தவர்களே. தோல்வியைத் தளமாக்கி, நம்பிக்கையைத் துணுக்கி. தைரியத்தால் கரையிட்டு அனுபவ அறிவில்ை வெற்றி எனும் பொன் மேடையிலே பிறர் போற்ற வாழ்ந்து கொண் டிருக்கிரு.ர்கள் , அந்த நிலையை நாமும் அடைய வேண்டு மால்ை. தோல்விக்குக் கேள்வி ஒன்றைத் தொடுப்போம்.