பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130


இதைத் தான் ஆடுகளம் அழகுறும் அனுபவங்களால் அனைவருக்கும் எடுத்துச் சொல்கிறது. இன்று நடந்ததற்கு மகிழ்ந்து கொண் டே யிருந்தால், நாளை நடக்கும் போட்டி களுக்குத் தயார்செய்துகொள்ள வேண்டாமா! தகுதியை யும் திறமையையும் தற்பெருமையுடன் தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்துவிட்டால், நாளை நடக்கப் போகும் போட்டிக்குரிய சிந்தனை, திறன், துணிவு எல்லாம் பயன் படுத்த வேண்டாமா? வீனுக அல்லவா போய்விடும்! உருண்டு போகும் உருளை க்கல் ஒன்றையும் சேர்க்காது’ என்பதுபோல, பேசித் திரிசி ன்றவர்களால் எதையும் தீர சிந்திக்க முடியாது. திறமையாகத் திட்டம் தீட்டமுடியாது. திறமறிந்து செயல்பட வும் முடி யாது, "நீ தொடர்ந்து வெற்றிகாண வேண்டுமென்ருல், உன் சிந்தனை, குறிக்கோள் எல்லாம் காரியத்திலேதான் இருக்க வேண்டும். இன்று நீ பெற்ற வெற்றி, நாளே நீ பெறப் போகும் வெற்றிக்குத் தூண்டுகோலாக உதவ வேண்டுமே தவிர, நாளை நடக்கும் போட்டிக்குக் குந்தகமாக அமையு. மாறு நடந்துகொள்ளக்கூடாது. த ைனே ப் பற்றியே பேசிக்கொண்டிருப்பவனே, கேட்ப வர்கள் வெறுக்கின்ருர்கள் . கேள்விப்படுபவர்கள் கூட கேலிப் பொருளாக மதித்து ஒதுக்கிட முயல்கின்றனர். மின்னல் மின்னி, இடி இடித்து பெய்யாது போகின்ற மேகத்தைப் பழிப்பது போலவே, வீராப்புப் பேசி, வெறுமனே நடப்பவர்களே யும் ஏக கின்ருர்கள். இழிவாகப் பேசுகின் ருர்கள். தற்பெருமையில் வரும் சுயவிளம்பரம் தானகவே மடிந்து போகின்றது என்பதை உணர்ந்திட வேண்டும். வெற்றியில் நாட்டம் இருக்க வேண்டும். அது இயற்கை. அந்த வெற்றியானது விவேகத்தை வளர்க்க வேண்டும். வீம்புக்கு விளை நிலமாகிடக் கூடாது,