பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133


பந்தயக் குதிரையின் சுறு சுறுப்பும், ஒடத்தயாராக இருக்கும் பரபரப்பும் போலவே, ஒவ்வொரு வீரனும் இருக்க வேண்டும். அதற்கு திடமான தேகம் வேண்டும். தெளிவான மனம் வேண்டும். ஒரு முகமான சிந்தனை வேண்டும். ஒன்றிய செயல் முறை வேண்டும். ஒற்றுமை வேண்டும். ஊறுபடா உழைப்பு வேண்டும், உறுதி குலையாத உற்சாகம் வேண்டும். இவைதான் வெற்றியின் து துவர்கள். இவற்றை வளர்க்கவே எல்லோரும் முயலவேண்டும். ஆடுகளத்தில் சுறுசுறுப்பாக இயங்கக் கற்றுக் கொண் டவர்கள். வாழ்க்கையிலும் அப்படியே விளங்குகின்ருர்கள். இத்தகைய அரிய அற்புதத்தை விளக்கும் ஆற்றல் பெற்று. விளங்குவது ஆடுகளமாகும். ஆகவே, வாழ்க்கையின் இனிய வெற்றியானது புகழ் என்பதாகும். அதல்ை தான் வள்ளுவரும், தோன்றிற். புகழொடு தோன்றுக, அஃதிலார் தோன்றலிற் தோன்ருமை நன்று’ என்று பாடினர். "புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் என்று தமிழர் தம் குண இயல்பை விளக்கும் பாடலும் உண்டு. பழி எனின், உலகுடன் பெறினும் கொள்ளலர் என்றும் கூறுகிறது. அப்படியான பழி நீங்கிய, தூய புகழுக்காக வாழ்வது மனிதப் பிறப்பாகும். அதை விவேகம் நிறைந்த வெற்றி யால் பெறுவது தான் ஆறறிவுடைய மனிதர்க்கு அழகாகும், எனவே, பற்று கொள்வோம். வெற்றியில் மகிழ்ச்சி பெறுவோம். வெற்றியில் விவேகம் வளர்ப்போம், ஆனால், வெறிகொள்ள மாட்டோம், வீம்பினே வளர்க்க மாட்டோம் பிறரை வெறுப்பேற்றவும் மாட்டோம் என்று அறப். பண்புைகளை சபதமாக ஏற்று வீரர்கள் விளையாட்டில் போராட வேண்டும்.