பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134


ஆடுகளம் தான் இந்த அற்புதப் பண்பை ஊட்ட முடியும், ஆடுகளத்தில் அருமையாக இதனைக் கற்றவர்கள் அழியாப் புகழை வரலாற்றில் பொறித்துக்கொண்டார்கள். ஆடுகளத்தில் நடந்து கொள்ளும் விதத்தைப் புகழ்ந்து, ‘இவன் பண்பாளன்’ (Gentleman) என்றே புகழ்ந்து பாடியிருக்கிருர்கள், - நம் நாட்டு விஜய் அமிர்தராஜ், ஸ்வீடன் தேசத்து வீரன் பிஜோன்பர்க் இவர்கள் ஆடுகளத்தில் பெருந்தன்மை யாக நடந்து கொண்டதற்காகப் பெரிதும் புகழப்பட்ட வர்கள் ஆவார்கள். அவர்களைப் பின்பற்றி, ஆடுகளத்தைப் பெரிதும் பயன்படுத்திக் கொண்டு புகழ் பெறுவோமாக! 5 இடமும் திடமும் உலகில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் தேவைகள் நிறைய உண்டு. அவற்றை நிறைவேற்றிக் கொள்ளும் ஆசைகளும் நிறைய உண்டு. தேவைகள் வேகத்திற்கு, உணர்ச்சிகள் ஆவேசத்திற்கு ஆசைகள் அடித்துக் கொள்கின்றன. ஆசைகள் ஆவேசத் திற்கு அவை நிறைவேறுகின்றனவா என்ருல் அதுதான் இல்லை. விளக்கெண்ணெயை பூசிக்கொண்டு வீதியிலே புரண் டாலும், ஒட்டுகின்ற மண்தான் உடலிலே ஒட்டும்’ என்பார்கள். நமக்கு என்ன என்று அன்று எழுதி வைத் திருக்கிறதோ, அது தான் நமக்கும் கிடைக்கும் என்று நம் முன்னேர்களின் வேதாந்தக் கருத்தை விளக்குகின்ற பழமொழி இது. - அடுத்தடுத்து முயன்ருலும் ஆகும் நாளன்றி எடுத்த கருமங்கள் ஆகா, பழுக்கும் நாளன்றி எந்தப் பழங்களும்