பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.5 J பழுக்காது என்பதாகவும் பாடிச் சென்று இருக்கின்றனர். ஆசையிருந்தாலும் அவசரம் வேண்டாம். அந்த நேரம் வரும்வரை காத்திரு என்பதாக சாந்த முடன் புத்திமதி கூறுகின்ற விதமாக இந்த வரிகள் நமக்கு வாழ்க்கையை விளக்குகின்றன. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்ற ஒரு பழமொழியையும் நமக்குக் கூறுவார்கள் பெரியோர்கள். இது விடா முயற்சியின் வேகத்தைக் காட்டுகிறது." "தொடர்ந்து உன் கடமையை செய்து கொண்டே வா? என்னும் சூட்சமத்தைக் குறிக்க வந்த பழ மொழியாகும். ஆடுகளத்தில் பார்த்தோமாளுல் இத்தன பழமொழி களும் இனிமையாக, எளிமையாக புரியும்வண்ணமாகத் தான் செயல்முறைகள் அமைந்திருக்கின்றன. விளையாட்டில் விளையாடுவதற்கென்று தேவைகளான சில திறமைகள்’ (Skilis) நிறைய வேண்டும். அவற்றை வளர்த்துக் கொள்கின்ற சூழ்நிலைகள், அதனுல் நிறைய பேரும் புகழும், வெற்றியும் வெகுமதியும் பெற வேண்டும் என்ற ஆசைகள் நிறையவே உண்டு. ஆசைகள் இருப்பதனுல் மட்டும் நிறைவேறி விடுமா என்பதை சோதன மூலம் நிரூபித்துக் காட்டி, நிறைய அனுபவங்களைத் தந்து, நெஞ்சுக்கும் நினவுக்கும் ஓர் படிப்பின்னகை, போதனையைத் தரக்கூடிய தன்மையில் தான் ஆடுகளம் அமைந்திருக்கிறது, எவ்வளவுதான் பயிற்சி செய்தாலும், முயற்சி செய் தாலும் நடப்பது நடந்தேயாகும் என்று பழமொழி கூறினாலும், நடக்கப் போவது தனக்கு நல்ல தாக அமை பட்டும் என்று துணிவுடன் தொடர்ந்து கடமையைச் செய் கின்ற மனத் தெம்பினை, மன எழுச்சியினை, கர்ம வீரகைக் காரியம் ஆற்றும் பண்பினை ஆடுகளம் காண வைக்கிறது.