பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 41 இங்கே கூறியிருக்கிருேம். ஆனல் கூறப்போகின்ற கருத்துக் கள், எல்லா விளையாட்டுகளுக்கும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும். š叫路蚤ü ஒருவர் 100 மீட்டர் ஒட்டப் பந்தயத்தில் குறிப்பிட்ட ஒரு நாளில் மாலை 2 மணி அளவில் கலந்து கொள்கிருர் என்ருல் , அவர் அந்த நாளில் வந்து நின்று, திடீரென்று ஒடி வெற்றி பெற்று விடுவதில்லை. அதற்கும் பல நாட்களுக்கு, மாதங்களுக்கு, பல ஆண்டு களுக்கு முன்னதாகவே தன்னை தயார் செய்து கொண்டே வருகிரு.ர். உடலைத்தயார் செய்து, உள்ளத்தைப் பக்குவப் படுத்தி, உணர்வுபூர்வமாக ஆயத்தம் செய்து கொண்டே வருகிரு.ர். போட்டி நடைபெறும் நாளன்று கூட அவர் பாரா முகமாக இருந்து விடுவதில் லே பங்கு பெறும் போட்டியை நினைத்துக் கொண்டேதான் இருக்கிருர் மனதால் தயாராகி விடுகிருர், உடலை தகுந்த நிலையில் வைத்துக்கொண்டு நேரத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிரு.ர். இத்தகைய, முன்னேற்பாடான ஆயத்தமே அவரது அமைதிகரமான மனே நிலைக்கும், ஒய்வான உடல் திறனுக்கும் உத்திரவாதம் அளிப்பனவாக அமைந்து விடுகிறது. - நேரத்திற்கு முன்னே வருதல் 2 மணிக்குப் பந்தயம் என்ருல் சரியாக 2 மணிக்கு வந்தால் முடியுமா! முன் கூட்டியே வந்து , ஆர அமர இருந்து, போட்டிக்கான ஆயத்தங்களைப்புரியவேண்டாமா?