பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 40 எத்தனையோ போட்டிகள். போர்கள். பயங்கர மோதல்கள். வனங்களிலே வாழ்ந்த மனிதன் விலங்குகளிடையே வாழ்வுக்காகப் போராடினன். நாகரிககால மனிதனே, தன்னைப்போன்ற மனிதனிடமிருந்து காத்துக் கொள்ளவே போராட வேண்டியிருக்கிறது. - எதை எடுத்தாலும் முன்னுல் சென்று பெற்ருல் தான் வாழமுடியும் என்ற பந்தய வாழ்க்கை இப்போது அமைந்து விட்டிருக்கிறது. வாழ்க்கை ஒரு பந்தயம் போன்றது என்று வேடிக்கையாகச் சொன்னது மாறியே விட்டது. அதற்கும் ஒரு படி மேலாகச் சென்று, வாழ்க்கை ஒரு பந்தயம் அல்ல, வாழ்க்கையே பந்தயம் தான்' என்று சொல்லும் படி ஆகி விட்டது. அவ்வாறு மாறி வரும் வாழ்க்கைப் பந்தயத்திற்கு தயார் செய்து தருவது தான் விளையாட்டுக்கள் என்கிருேம். அந்தத் தயார் முறைகளை என்வாறு என்று இங்கு விரிவாகக் அாண்போம். ஒட்டப் பந்தயம் விளையாட்டுக்கள் என்ருல் எண்ணிக்கையில் அடங்காத விளையாட்டுக்கள் இருப்பதால், சான்றுக்கு ஒன்றை எடுத்துக் கொண்டு காண்போம். அதற்காக, அன்ரு ட நடைமுறை போல அமைந்திருக்கும் ஒட்டப் பந்தயத்தை எடுத்துக் கொள்வோம். பயிற்சியே பெருதவர்களும், பயிற்சியில் மிகுந்தவர் களும் மிக விருப்பத்துடன் பங்கு பெறுகின்ற நிகழ்ச்சியாக ஒட்டப்பந்தயம் இருப்பதால் தான், பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் ஆற்றல் பெற்றிருப்பதாலும் தான் இதனை