பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143


எல்லையின் இலட்சியமே அவரை இவ்வாறு சாந்தப்படுத்தி சலனத்தைப் போக்கிக் காத்து நிற்கிறது. தன்வழி அறிதல் நோக்கம் தெளிவாயிற்று. இலட்சியமான எல்லையை அடைவதும் எதி ரே தெரிகிறது. பந்தயத்தின் ஆரம்பமும் இதோ! புறப்பட்டுப் போயாக வேண்டும் என்கிற கட்டமும், வருகிறது . எப்படிப் போய்ச் சேர்வது! எப்படியும் போய்ச் சேரலாமா என்ருல், அதுதான் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு ஒட்டப் பாதை (Lane) உண்டு. அதிலே தான் ஒடவேண்டும். பிறருக்குரிய பாதை யில் குறுக்கிடவே கூடாது, அவ்வாறு குறுக்கிட்டால், அவர் வெற்றி வாய்ப்பையே இழந்து போகிருர், அதனுல், தனக்கென்று ஒரு பாதை உண்டு, வழி உண்டு, அதுவே தன் வழி என்பதை உணர்ந்திட வேண்டும். பிறர் வழியில் என்றும் குறுக்கிடுவது பெரும் தவறு என்பது அவர் அறிந்ததுதான், ஆகவே, அவர் எச்சரிக்கையோடு தன் வழியில் தான் ஒடுகிருர், எப்பொழுது இடையூறுகளும் தவறுகளும் நேர்கிறது என்ருல், ஒருவர் வழியில் இன்னொருவர் குறுக்கிடும்போது தான். அவ்வாறு தகராறு நிகழாமல் தன்வழி செல்லும் நியிேனே விதிமுறை காத்து நிற்கிறது. பழிக்கு அஞ்சுதல் தன் வழியை விட்டு, பிறர் பாதையில் சென்ருலே, பார்க்கும் பார்வையாளர்கள் கூச்சலிடுவார்கள், கண்