பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

הרד .ם. காணிக்கும் அதிகாரிகள் குறித்துக் கொள்வார்கள். அவர் வெற்றி பெற்றிருந்தாலும்கூட, பந்தயத்தில் இருந்தே நீக்கப்படுவார். வெற்றிக்கு வெற்றியும் போய், கெட்ட பெயரும் ஏற்பட்டு, போட்டியிலிருந்தே நீக்கப்படுகின்ற பழியும் ஏற்பட்டு விடுகிறது. அதுவும் பலர் கூடியுள்ள கூட்டத்தின் முன்னே ஏற்படுவதால், பந்தயத்தில் கலந்து கொள்பவர் கள் முடிந்தவரை வழி மாரு மல், விதி மீருமல் பயந்தே தான் பங்கு பெறுகின்ருர்கள். பழிக்கஞ்சும் குணம் அவர் களிடம் பண்பாய் மிளிர்கிறது. கடைசிவரை முயற்சித்தல் ஒட்டம் தொடங்கி விட்டது, தன்னுல் முன்னுக்கு வர முடியும் என்ற நம்பிக்கையில் தான் ஒடுகிருர். அவ்வாறு முடியவில்லை. எல்லோரும் முன்னே சென்று விட்டார்கள். இவர் தான் கடைசி என்ருலும், கடைசி வரை ஒடி முடிக்க வேண்டும் என்கிற கடமை உணர்வுடனே ஒடுகிரு.ர். பிறர் கேலி பண்ணுகின்ருர்கள் என்ருலும்கூட. கடைசி வரை போட்டியிட்டே தீருவேன்’ என்று இறுதி வரை முயற்சியை மேற்கொள்ளும் பண்புதான் தலை தூக்கி நிற்கின்றது. அதல்ை விடாமுயற்சி வளர்கிறது. மன வலிமை மிகுதியாகிறது. இவ்வாறு தொடர்ந்து பணியாற்றும் தூய நெஞ்சம் வளர்பிறையாகிக் கொள்கிறது. வெற்றிக்காக மட்டும் முயற்சியல்ல. பங்கு கொண்டோம், பாதியிலே பயந்தோ தளர்ந்தோ நின்றுவிடாமல், முழுமையாகப் பங்கு பெற்ருேம்’ என்கிற மன நிறைவையும் கடைசி வரை முயற் சித்துக் கடமையாற்றும் செயல் தருகிறது.