பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145


ஒரு நேரம் - ஒரு செயல் எவ்வளவோ பேர் சுற்றியிருந்து பார்க்கின்ருர்கள். தனக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்று பலர். கண்ணுக்கு அழகாக மீண்டும் ஒருமுறை பார்க்கத் துாண்டும் அழகானவர்களும் வந்திருக்கலாம். - ஆசைப்பட்டதை யெல்லாம் பார்க்க நினைக்க முடிக்க, முடிக்கின்ற நிலே அங்கு இல்லை. ஒடி முடிக்க வேண்டும் என்கிற ஒரு இலட்சியம். ஒரு நேரத்தில் ஒரு செயல் என்கிற ஆழ்ந்த கவனம். வேறு பக்கம் திசை திரும்பாத திண்மை யான மனம் , - இப்படி ஒரு காரியத்தை ஒரு தேரத்தில் செய்கின்ற உன்னதப் பயிற்சி இந்த ஒட்டப் பந்தயத்திலே விளைகிறது. அதனல், செய்வதை திருந்தச் செய் என்கிற செழுமை யான செயலாற்றலும் செம்மையடைகிறது. பல மீன்களைப் பார்ப்பவன் ஒரு மீனையும் பிடிக்க முடியாது என்பார்கள். அந்த பழமொழிக்கு ஆளாகாமல், மரக்கொம்பில் அமர்ந்த கிளியை மட்டும் குறிபார்த்த அர்ச்சுனன் போன்ற, ஒருமனப் பட்ட பண்பினை மிகுதியாகப் பெறும் வல்லமை கிடைக் கிறது. தவறை உணர்தல் போட்டி முடிந்துவிட்டது. வெற்றி கிடைக்கவில்லை. ஏன் வெற்றி கிடைக்கவில்லை? தான் செய்த தவறு என்ன என்பன போன்ற கேள்விகளைக் கேட்டுக் கொள்ளும் பொழுது, தவறுகள் நிச்சயம் புரியும். அதற்கான விளக்கமும் விளங்கும். திருத்திக்கொள்ளும் புது முறைகளும் புலகுைம்.