பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. A தான் பங்குபெற வேண்டும். விதிகளை மதிக்கத் தெரிந்தால். தான் அடங்க முடியும். விதிகளுக்கு அடங்காதார். வாழ்க்கைக்கும் அடங்காதவராவார். விதிகளுக்கு முன்னே எல்லோரும் சமம். ஏழை, பணக் காரர் என்ற ஏற்றத்தாழ்வு இல்லாத சமதர்மப் பூங்கா வாகப் பந்தயங்கள் இருக்கின்றன. விதிகளை மதித்தவர், மற்றவரால் மதிக்கப்படுகிருர், விதிகளைப் புறக்கணிப்பவர் பிறரால் புறக்கணிக்கப்படுகிருர், என்பன போன்ற படிப்பினைகளை பந்தயம் நன்கு கற்றுத்தருகிறது. மாற்ருரையும் மதித்தல் பிறரது திறமையை மதிக்கவும் போற்றவும் கூடிய மனப்பாங்கினைத் தான் பண்பான மனம்’ என்கின்றனர். தன்னை வெற்றி கொண்டவனையும் மதித்துப் பாராட்டுவது தான் விளையாட்டுப் பண்பாகும். இந்தப்பண்பினைத்தான் விளையாட்டுத்துறை ஒவ்வொரு வீரனிடமும் எதிர்பார்க்கிறது. தான் மற்றவர்களை மதித்தால் தானே, மற்றவர்களும் தன்னை மதிப்பார்கள்’ என்னும் உணர்வு ஒருவருக்கு ஏற்பட்டால், அதுவே இப்பண்பினை வளர்க்கும் அரிய ஒளடதமாகப் பயன் தரும், முன்கை நீண்டால் தான் முழங்கை நீளும் என்பார்கள், ஒருவர் எவ்வளவு பெருந்தன்மையுடன் பழகுகின்ருரோ, அதுபோலவே தான் பிறரும் அவருடன் பழகுவார்கள். எதிர்த்து ஆடுவதினலேயே ஒருவர் எதிரியாகி விடுவதில்லை. மாற்ருன் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்பது போல, மாற்ருரும் திறமையாளர்கள்தான். அவர்களது