பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 4 3 திறமையை வெற்றியை மதித்துப் பாராட்டும் வாய்ப் பினேயும் மனப்பக்குவத்தையும் அளிக்கும் சந்தர்ப்பங்களே பந்தயங்களே அதிகமாகவே அளிக்கின்றன. இவ்வாறு ஒரு ஒட்டப்பந்தயத்தில் பல சிறந்த பண்பு கள் முகிழ்த் தழும் வாய்ப்புக்கள் அமைந்திருப்பதை நாம் காணலாம். இதுபோல வே எல்லா விளையாட்டுக்களிலும் கற்றுக்கொள்ள வேண்டிய திறமைகள், பண்புகள் நிறைய இருக்கின் தி . இத்தகைய பண்புகள் எல்லாம் பந்தயத்திற்கு மட்டும் தான் என்று சிலர் எண்ணிக்கொண்டிருக்கின்ருர்கள். இவைகள் வாழ்க்கைக்கும் ஏற்ற பண்புகளாகும். எந்தக் காரியத்தைத் தொடங்கவும் முன் கூட்டியே ஆயத்தமாக இருக்கும் பண்பு. எதையும் நேரம் கருதி, முன்னதாகவே சென்று, நேரத் தில் செய்து காத்திருக்கின்ற பண்பு, என்ன நேருமோ என்று அஞ்சாமல், சிந்தாமல் சிதருமல் பதட்ட மில்லாமல் காரியம் ஆற்றுகின்ற பண்பு. தனக்கென்று இருக்கும் திறமையை, தனக்கென்று இருக்கின்ற வழி முறைகளுடன் செய்கின்ற பண்பு , தர்மத்தின் நிழலிலே வாழ வேண்டும். தாறுமாருன போக்கு கடைசியில் கடுமையான தண்டனைக்கு ஆட்படுத்தி விடும் என்பதை அறிந்து, பழிபாவத்திற்கு அஞ்சி, பிறர் போற்றுகின்ற நடைமுறைகளைப் பின்பற்றி காரியம் ஆற்றும் பண்பு. - *