பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

.

'பருவத்தில் பயிரி டாமல் தூங்கினல், அறுவடை காலத்தில் அழவேண்டியதுதான்’ என்பது பழமொழி. வாழ்க்கையை பிரச்சினை இல்லாததாக்கி வாழ வேண்டு மானல், வாழ்க்கையை உணர்ந்து கொள்ள வேண்டும். உழைக்க முயல வேண்டும். எப்படி? ஒட்டகமானது தனது பாதையிலிருக்கின்ற மணற்பரப் பினைப் பற்றி மலைக்காது, பசி தாகத்தைப் பற்றி களைக்காது, சகித்துக் கொண்டு, பாலைவனப் பரப்பிலே சோர்வின்றி செல்வது போல, ஒவ்வொருவரும் தன் வாழ்க்கைப் பயணத் தைத் தொடர வேண்டும். கடலில் நிற்கும் கற்பாறை போல, மன உறுதி வேண்டும். ஏனென்ருல் வாழ்க்கையில் பிறந்துவிட்டால், வாழ்ந்து செல்ல வேண்டியதுதானேt வானத்தின் கீழ் இருந்து கொண்டு இடிக்கும் மழைக்கும் பயந்தால் என்ன ஆவது? ஒரு வேடிக்கையான மனிதர், வாழ்க்கையைப் பற்றி பின்வருமாறு கூறி விளக்குகிரு.ர். வாழ்க்கை என்பது ஒரு சீட்டாட்டம். அதில், கையில் வந்திருக்கும் சீட்டுக்களைக் கொண்டுதான், ஆட்ட விதிகள் மாருமல் ஆட வேண்டும். வந்திருக்கும் சீட்டுக்களைக் கொண்டே ஆடி வெற்றி பெற வேண்டுமே தவிர, வராத சீட்டுக்களைப் பற்றி வருந்திக் கொண்டிருந்தால், ஆட்டம் என்ன ஆகும்! அங்கு தோல் வியே தவிர, வேறு கேள்வியே கிடையாது அல்லவா! வாழ்க்கை என்பது பிரச்சினையே அல்ல! 'இது நம் தலைவிதி! இப்படித்தான் நமது காலம் இருக்கும், என்று மயங்கி வாழும் மக்களுக்கு வாழ்க்கை பெரிய பிரச்சினைதான். வேறு வழியேயில்லை. உலகமென்பது ஒரு விடுதி (lodge). அதனுள் வருவோ ரும், வந்து தங்குவோரும், திடீரெனப் பிரிவோரும் என்ப