பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 5 தாகத் தான் பயணிகள் இருப்பார்கள். விடுதியின் விதிகள், அமைப்பு, வசதி, முதலியவற்றைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப தன்னை சரிசெய்து (Adjust) கொள்கின்றவர் களுடைய காலம், அங்கே இன்பமாகக் கழியும். உல்லாசமே அங்கு பொழியும். விடுதியின் அமைப்பைப் புரியாமல், விதிகளின் குறிப் பைப் புரியாமல், தாறுமாருக நடப்பவர்களின் காலம் கசப் பாக இருக்கும். விடுதியே சிறையாக, மருத்துவக்கூடமாகத் தோன்றிலுைம், ஆச்சரியமே இல்லை. 'மனித இனத்தில், பகுத்தறியும் அறிவு இருக்கிறது. ஆனல், அந்த அறிவு, மனிதனின் உரிய தகுதியை வளர்க்க வில்லை. அவனது அறிவானது, உடல்நலத்திற்கும், அவனைச் சூழ்ந்துள்ள மனித இனத்துக்கும் பல நிலைகளில் பயன் படாமல் போய் விடுகிறது’ என்று பெரியவர்கள் குறை பட்டுக் கொள்வதுமுண்டு. ஆகவே, அறிவை உரிய முறையில் சேர்த்தால், வாழ்வு எப்படி பிரச்சினையாகும்? குருவி அமைக்கின்ற கூடு, கரை யான் கட்டுகின்ற புற்று, தேனிக்கள் செய்திருக்கும் தேன் கூடு. இவையெல்லாம் அரிய உழைப்பின் சின்னங்கள். முயற்சியால் விளைந்த வண்ணங்கள். பயிரிடுவோனுக்குப் பஞ்சம் வராது. பக்தி உள்ளவனுக்கு பயம் எழாது. மெளனமாக இருப்பவனுக்குக் கலகம் வராது. இதுபோலவே எச்சரிக்கையாக இருப்பவனுக்குத் துன்பம் கிடையாது. இவ்வாறு, வாழ்க்கையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கை ஒரு ஏணி போன்றது. நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் , மேலேயோ கீழேயோ நம்மை இழுத்துச் செல்லும் என் கிருர் பாப்ஸ் எனும் மேல் நாட்டு