பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16


அறிஞர். எடுத்து வைக்கும் அடியை ஏன் நாம் கீழாகக் கொண்டு செல்லுமாறு வைக்க வேண்டும்; ‘ஏணியின் உச்சியை அடைய, கீழ்ப்படியிலிருந்துதான் தொடங்க வேண்டும். வாழ்க்கையிலும் அப்படித்தான். என்கிற பித்தகோரஸ் தத்துவ ஞானியின் வாக்கினைப் போல, வைக்கின்ற ஒவ்வொரு அடியையும் எச்சரிக்கை யுடன் வைப்போம். அச்சமின்றி வைப்போம். அறிவுடன் வைப்போம். அப்பொழுதுதான், பிரச்சினை இல்லாத வாழ்க்கை அமையும். சிக்கல் இல்லாத சீரான வாழ்க்கை அமையும்.

    • வாழ்க்கைக்குத் தேவை கடமை. கடமையை விட்டு இன்பம் நாடுபவன். கடமையையும் இழக்கிருன். இன்பத் தையும் இழக்கிருன். ஆகவே, கடமை என்ன என்று புரிந்து கொள்வதற்கு முன்னமேயே, வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.