பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. வாழ்க்கையின் குறிக்கோள்! மனித வாழ்க்கை. கள்ளங் கபடமறியா குழந்தைப் பருவத்தில் மலர்கிறது. காதலும் மயக்கமும் கலந்த காளைப் பருவத்தில் வளர்கிறது. கவலையும் கலக்கமும், பொறுப்பும் பிரச்சினையும் மிகுந்த குடும்ப வாழ்க்கையில் ஊடாடுகிறது. தளர்ச்சியும் உணர்ச்சியும், நலிவும் மலிவுமிகுந்த வயோதிகப் பருவத்தில் ஊஞ்சலாடுகிறது. பிறகு, பிறந்த பொழுது குழந்தைக்கு இருந்த உடல் மனநிலையைத் தந்துவிட்டு, வாழ்க்கை ஒய்வு எடுத்துக் கொள்கிறது. உலகில் வசந்தம் வருகிறது. இன்பம் தருகிறது . கோடை வருகிறது, கொதிக்கச் செய்கிறது. குளிர் வருகிறது. நளிச் தருகிறது. நலிவைப் பொழிகிறது. இவ்வாறு ஆண்டுக்குப் பல கால நிலையையும், கோல எழிலேயும் தருகின்ற இயற்கையினுாடே தான், மனித வாழ்க்கை முன்னேறி நடை பயில்கிறது. அதனுாடே, இன்பம், துன்பம், சலிப்பு, களேப்பு, கோபம், தாபம் எல்லாம் மனிதனை மாட்டி விடுகின்றன. ஆட்டியும் வைக் கின்றன.