பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24


வாழ்க்கை என்பது சிக்கலான வலை போன்றது. மனித அறிவும் குழந்தையின் இயல்பைப் போன்றது. வலையைப் பிரிக்கப் பிரிக்க, சரியாக வராமல் சிக்கல் மிகுந்து கொண்டே போவது போல்தான் வாழ்க்கையின் வழியும். ஆகவே, வாழ வேண்டும்’ என்ற ஒர் உறுதி ஏற்பட்டால் ஒழிய, வாழ்க்கையில் வழியும் புரியாது. விவரமும் விளங்காது. வெற்றியும் கிடைக்காது. “தனக்குள்ளே என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுத் தெரிந்து வாழ்ந்துகொள்ள முடியாத ஒரு மனிதனை , எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை என்று கன்பூசியஸ் எனும் அறிஞர் கூறு கின்ருர். ஆகவே, ஒருவனது வாழ்வும் வழியும் அவனது கையில்தான் இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் எண்ணத்தாலும் செயலாலுமே உலகத்தில் வாழ்கிருன். அதுதான் உண்மை நிலையுங் கூட. அந்த இரண்டு நிலையையும் சற்று விளக்கமாக நாம் இங்கே காணலாம். எண்ணத்தால் வாழ்கின்ற வாழ்க்கை உள்ளுலக வாழ்க்கையாகும். (inner Life). செயலால் வாழ்கின்ற வாழ்க்கை வெளியுலக வாழ்க்கையாகும் (Outer Life). அதாவது உணர்தல், சுவைத்தல், முகர்தல், காணல், கேட்டல் போன்ற செயல்களால் வாழ்கின்ற வாழ்க்கை யாகும். உள்ளுலக வாழ்க்கையானது கற்பனையாலும், கணி வார்ந்த நினைவுகளாலும், நொடிக்கொரு தரம் நிமிர்ந் தெழும் எண்ணங்களாலும் நிறைந்ததாகும். எதையும் எதிர் பார்ப்பதும், இறந்த காலத்தை எண்ணி ஆறுதல் அடை. வதும், நிகழ்காலத்திற்கேற்றவாறு வாழ்வை நேர்ப்படுத்திக் கொள்வதும் இதன் வழியாகும்.