பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25


இந்த மனவாழ்க்கையால் மன அமைதியும் உண்டா கலாம். மாருக, மயக்கமும் குழப்பமும் ஏற்பட்டு மனே வேதனையும் உண்டாகலாம். அது, அவரவரின் மனப் பக்குவத்திற்கும் வாழ்க்கையை ஏற்று வழியை அமைத்துக் கொள்கின்ற பாங்கிலேயும் அமையும். ஆளுல் வெளியுலக வாழ்க்கை என்பது, நிகழ்காலத் திற்கு மட்டுமே சொந்தமானதாகும். கடந்தகால வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டு, கணித்துக் கொண்டு, நிகழ் காலத்தை திரடின்றி தடத்திச் செல்லும் வாழ்க்கையாகும். இதற்கு ஐம்புலன்களே அதிகமாக உதவுகின்றன. ஆனல் ஒன்று. வெளியுலக வாழ்க்கைக்கு வளமான உடலும், நலம் பாய்ந்த நன்னிலையும் மிக மிக அவசியமாகும். இந்த அமைப்பில் பார்த்தால், நாம் ஒருவருடைய வெளியுலக வாழ்க்கையை மூன்று நிலையாகப் பிரிக்கலாம். அந்த தனிப்பட்டவரின் இயல்பினே-தனிநலப்பண்பு, வழி நடைப்பண்பு, உயர்நெறிப்பண்பு என்று மூன்று வகைக் குணங்களாகப் பகுத்துப் பார்க்கலாம். ஏனெனில் இவையே ஒருவரின் வாழ்க்கை நெறியை வழி வகுத்து வழி காட்டு வனவாகும். தனிநலப் பண்பு : மனிதருக்குத் தேவையான பண்புகளில், மகோன்னத மாக விளங்குவது தனி நலப்பண்பாகும். நல்ல நினைவாற்றல், நடந்து போன நிகழ்ச்சிகளில் நலமார்ந்த அனுபவத்தைப் பெறுதல்; அதனுடன் நிகழ்காலத்தை ஒத்து நோக்கி, நிகழ்ச்சிகளை சீருகவும் சிறப்பாகவும் கொண்டு செல்லுதல்; இந்த முன்னுணரும் பண்புக்கும் மேலே முகழ்க்கின்ற எதிர் பாராத எதுநேரினும்,நெஞ்சம் நேகிழாது ஏற்றுக்கொள்ளு 2