பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26


தல்; அதிலேயே அழுந்திப் போகாமல் நல்லவைகளை ஏற்றுக் கொள்ள முயலுதல்; இவ்வாறு தன்னை அறிவதும், தன் பொறுப்பை உணர்வதும் ஆகிய அறிவும், பிறருக்கு மதிப் பளித்தலும், தனக்கென்று சிறந்த பெருமையைத் தேடிக் கொள்வதுமாகிய எல்லா பண்புகளுமே தனி நலப்பண்பு களாகும். வழிகடைப் பண்பு : இயக்கம் தான் வாழ்க்கையாகும், இயக்கம் இல்லை யென்ருல், உடல் இறந்து போனதுக்குச் சமமே இயக்கத் தில்ை தான், வாழ்க்கையில் ஈடுபாடு அதிகமாகிறது. ஒரிடம் விட்டு ஒரிடம் இயங்கிச் செல்லும்பொழுதுதான் வாழ்க்கையே தொடங்குகின்றது. இடம் விட்டு இடம் மாறும் பொழுது, கட்சிகளும் காட்சிகளும் மாறிமாறி வருகின்றன. காட்சிகள் மாறுகின்ற பொழுது, கற்பனையும் கருத்துக்களும் புதிது புதிதாகத் தோன்றுகின்றன. உள்ளத் தலத்திலே ஊன்றுகின்றன. அப்பொழுது ஐம்புலன்களும் அந்த தோற்றத்தில் உவப்பும் உற்சாகமும் மேலிட மீண்டும் மீண்டும் தொடர்பு கொள்கின்றன. இதற்கு வாய்ப்பளிப்பது இயக்கந் தானே! ஒன்றின் மேல் ஒன்ருக தொடர்ந்து ஏற்படுகின்ற அனுபவங் களே அறிவதற்கும், ஆராய்வதற்கும் ஒருவருக்கு சந்தர்ப்பம் கிட்டுகிறதல்லவா! - அடுத்தவர் நம்மிடம் காட்டுகின்ற அன்பு ; இழைக் கின்ற இன்னல்: அதனைத் தாங்குகின்ற பொறுமை: இயற்கை சிந்துகின்ற எழிலினைப் பருகி, உருகி அனுபவிக்கின்ற காட்சித்திறன்: தேனுக இனிக்கின்ற ஒலியைத் தழுவிக்