பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29


வந்த இன்பம், பிணி நீங்கியதால் பெற்ற இன்பம், பெருமை யால், வாய்மையால், தூய்மையால், அறிவால், அருணால் ஏற்படுகின்ற நிகழ்ச்சிகளின் விளைவே மகிழ்ச்சி என்கிருள்கள் அறிஞர்கள்! குருடன் கைவிளக்கு பயன்படாது. கசடர் கை செல்வம் பயன் தராது. அகங்காரமுள்ள அறிவு துணை வராது. அது போலவே, வளமில்லாத உடலில் வதிகின்ற பண்புகளும் வாழ்க்கைக்குப் பயன் நல்காது. எனவே, வாழ்க்கையின் குறிக்கோள், வளமார்ந்த வழிகளில் சென்று பெறுவதற்கு, வளமான உடலை நாம், என்றுமே கொண்டிருக்க வேண்டும். அதுவே அறிவுடையோர்க்கு அழகாகும். அதுவே ஆண்ட வனின் அருளார்ந்த கட்டளையுமாகும். * * *