பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. வாழ்க்கையி ன் ஆதாரம்! வாழ்க்கைக்கு ஆதாரம் எது? நமது உடல்தானே! உடிலே வைத்துத் தானே உலக வாழ்க்கை நடக்கிறது. உடல் நிலே தளர்ந்தாலும், நிலை குலேந்தாலும் நிகழ்வது என்ன என்பது நாம் அறிந்த ஒன்றுதானே! அதல்ை தான் ஒளவைப் பாட்டி அழகாகப் பாடிச் சென்ருள், அரிது அரிது மானிடர் ஆதல், அதனிலும் அரிது கூன் குருடு செவிடு, பேடு நீங்கிப் பிறத்தல்’ என்று. எடுத்த பிறவியில் எழிலாய், ஏற்றம்பெற்ற மதியு டிைத்தாய், கேடின்றி குறையின்றி, உடல் கிடைப்பது உலகில் அதிசயம்தான். ஏனெனில், மனித உடல் என்பது, உலகில் உள்ள எல்லா உயிரினங்களையும்விட உயர்ந்தது. சிறந்த்து, ஒப்பற்றது. ஜீவகோடிகள் அனைத்திலும் செழுமையானதாக, முழு மையானதாக, வளமையானதாக, எழிலுமானதாக உடல் கொண்ட மனிதப் பிறவிதான் நமக்கெல்லாம் கிடைத் திருக்கிறது. குரங்கிலிருந்து மனிதன் மாறினன், தேறினன்