பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31


என்பது கொள்கையாக வருணிக்கப்பட்டாலும், அதனுள் நாம் புக வேண்டாம். ஆலுைம் ஆதாரமான உடலை நாம் அறிந்து கொள்ள வேண்டாமா! மனிதன் இயற்கையின் ஒரு பகுதியாகவே இருக்கிருன். மற்றைய உயிர்களைப் போலவே வளர்கிருன், வாழ்கிருன், மடிகிருன். அவனுள்ளே அரிய பெரிய ரகசியங்களையும், அதிசயங்களையும், படைத்துக் கொண்டல்லவா திரி கிருன், திகழ்கிருன், மகிழ்கிருன்! மனித உடலமைப்புக்கும் விலங்கின உடலமைப்புக்கும் வேற்றுமையை விட ஒற்றுமையே அதிகம் உண்டு என அறிவியல் வல்லுநர்கள் ஒப்பிட்டு விளங்குவார்கள். அதனை ஆராயும் பொழுது, மனித வாழ்க்கையும் விலங்கின வாழ்க்கையுடன் ஒட்டியும் உரசியும் தான் போய்க் கொண்டு இருக்கின்றன என்கிற ரகசியமும் நமக்குப் புரியாமல் இல்லை. வளைந்த முதுகெலும்பு. வில்லாய் வளைந்த உடல் முழுதும் அடர்த்தியான மயிர்த் தொகுதி. குனிந்த நடை. நீண்ட பற்கள். கைகளைப் பயன்படுத்தும் திறனில்லாமை போன்ற குறைகளுடன் மிருகங்கள் வாழ்கின்றன. நிமிர்ந்த முதுகெலும்பு. நேரான அணி நடை. மயிர் நீங்கிய மழமழப்பான மேணி. அளவான அழகான பற்கள். உறுப்புக்களின் விழுமிய அமைப்பு வடிவழகான இதழ்கள். வளர்ச்சியடைந்த மூளே. கைகளைப் பயன்படுத்தும் திறன். கால்களால் நிமிர்ந்து நின்று நடக்கின்ற சக்தி. பேசும் ஆற்றல். பெரிதும் விளையாடும் முகபாவம் எல்லாம் மனித இனம் பெற்ற மாபெரும் பரிசு. பெரும் விந்தைமிகுந்து விளங்கும் இயற்கையின் சீதனந்தானே! தேனத்தைப் பெற்ன சிறப்பு மிக்க மனித இனம், செயற்கரிய சாதனங்களையெல்லாம் செய்யத்தொடங்கியது.