பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32


- | கைகளைப் பயன்படுத்திடக் கற்றத் திறமையே, அரிய கண்டு பிடிப்புக்களுடன் விளையாடத் தொடங்கியது. கைகள் புதிது புதிதாகக் கருவிகளைப் படைத்தன. அதுவே நாகரீகத்தை வளர்த்துத் தந்தன. கைகளில் அசைவுகள் மலர்ந்தன. அவையே குறியீடாக, மொழியாக வளர்ந்தது. கைகளால் மூளையால் மனித வாழ்க்கை மேம்பாடு அடைந்தது. மேல் நோக்கி முன்னேறியது. மெருகேறிய உடலின் மகிமை மேன்மையுற்றுத் திகழ்ந்தது. விஞ்ஞானத்தினை விளைத்து விந்தைகள் பல புரியும் வல்லுநர்கள் கூட, விளங்கிக் கொள்ள முடியாத அளவில் அல்லவா மனித உடல் விளங்குகிறது! மேலெழுந்தவாறு பார்த்தால், உடலுக்கு நிகர் உடலே. அதன் அருமையைப் போற்றிப் புகழ்வோர், காத்து வாழ்வோர் களிப்படைகின் ருர்கள். கற்கண்டு வாழ்க்கை வாழ்கின்ருர்கள். ‘வாழ்க்கை மாளிகையின் வலிமை மிக்க அஸ்திவாரம். நல்லெண்ணங்களை நாளெலாம் எழுப்பும் தெய்வக் கோயில். சுந்தரக் காட்சிகளிடையே சுகம் காட்டும் சுவை மிக்கத் தேனுாற்று. ஆனந்த சுடர்தவழும் அன்பொளி ஊட்டும் அற்புத விளக்கு. இதை அலாவுதீன் அற்புத விளக்கு என்று உடல்பற்றிச் சுவைபடக் கூறுவாரும் உண்டு. இத்தகைய பெருமைமிக்க உடலை நாம் பேணிக்காத்தால் தான், மாளிகை நிலைக்கும். கோயில் சிறக்கும். ஊற்று சுரக்கும். ஒளி விளக்கும் ஒளிரும். இல்லையேல், உடல் கூனிக் குறுகும். நாணி நடுங்கும். சதைக்குன்ரு ய் நடமாடும். சகல நோய்களும்சாய்ந்தாடுகின்றஊஞ்சல் உடம்பாக,நோஞ்சல் திடலாக வாழச் செய்யும். இதல்ைதான், நம் உடலை, ஓராயிரம் காலம் பாரத்தவமிருந்து பெற்ற, வாராது வந்த மாமணி என்று கூறி மகிழ் கிருேம்.