பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38


அரும்புக் கோணிக் கொண்டு நின்ருலும் அதன் மணத்தில் மாற்றம் இல்லை. கரும்பு கோணிக் கொண்டு வளைந்து நின்ருலும், அதன் சுவையில் மாற்றம் இல்லை, அதில் வரும் வெல்லம் இனிக்கும், பாகும் சுவைக்கும். அது போல, இரும்பு கோணி சங்கிலியானல், டில்லி யானையை இழுத்துக் கட்டி மடக்குகின்ற சங்கிலியாகி விடுகிறது. ஆனால், மனித உடலில் உள்ள நரம்புகள் நேராக இருக்காமல் கோணி வளைந்து பின்னிக்கொண்டால் நாம் என்ன செய்ய முடியும்! வாழ்க்கையே இல்லை என்றுதானே நம்மால் கூறமுடியும்! வானம் இல்லாவிடில் மழையில்லை. வயல் இல்லாவிடில் விளைச்சல் இல்லை. பசு இல்லாவிடில் கன்று இல்லை. பகலவன் இல்லையென்ருல் ஒளியுமில்லை என்பதுபோல, உடல் இன்றி இந்த உலக வாழ்க்கையில்லை என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும். நீரோட்டத்தின் வழியாகவே படகு செல்கிறது. தலைவன் வழியாகவே தொண்டன் செல்கிருன். உள்ளத்தின் வழியில்தான் உடலும் செல்கிறது. அதுபோலவே, உடல் வழியில் தான் உலக வாழ்க்கையும் செல்கிறது. ஆகவே, வாழ்க்கையின் ஆதாரமாக விளங்கும் உடலை, நாம் போற்றிக் காத்து வாழ வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து, நாம் வாழ்வோம், அதுதான் சிறப்பான வாழ்க்கையுமாகும்.