பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. உடலும் உள்ளமும் எண்ணத்தாலும் செயலாலும் இயங்கக்கூடியது மனித இனம். சமுதாயமாக சேர்ந்து வாழும் சிறப்பினைப் பெற் றிருப்பது மனித இனம். தனக்குரிய தேவையை உணர்ந்து, முடிந்தவரை சென்று சேகரிக்கும் திறமை பெற்றுத் துலங்குவது மனித இனம். தேவை ஏற்படும்பொழுது மட்டும் தேடி அலைந்து திரிகின்ற சிங்கம்போல, மனித இனத்தின் வாழ்க்கை அமையவில்லை. தேவை முடிந்த பிறகும், திருப்தி அடைந்த பிறகும்கூட, பிற்காலத்திற்கும் வேண்டும் என்று சேர்த்து வைக்கின்ற ஆசையிலே அலைமோதிக் கொண்டிருப்பதும் மனித இனம். அத்துடன் மட்டுமல்ல. ஆசைக்கும், எதிர்ப்பட்ட பொருளை எல்லாம் எண்ணத்தால் தன்னுடன் ஐக்கியப் படுத்திக்கொண்டு, அடிமையாகும் போக்குக்கும், மன எழுச்சிக்கும் இரையாக மாட்டிக்கொண்டு, கவலையால் உழல்கின்ற வாய்ப்பையும் பெற்றிருப்பது மனித இனம்.