பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40


வாழ்க்கை வண்டியில் பூட்டப்பட்ட குதிரையாக, உடல் இருக்கிறது. ஒட்டும் சாரதியாக உள்ளம் அமர்ந்து இருக் கிறது. குதிரை இருந்தால்தானே வண்டியும் சாரதியும் வாழ முடியும் வசதி காண முடியும் குதிரை படுத்துவிட்டால், கும்மாளமும் குது.ாகலமும் அவ்வளவு தானே! மனித உடலானது குதிரையைப் போல. அதுவும் பந்தயத்தில் பங்குபெற நிற்கும் குதிரையைப் போல இருக்க வேண்டும். அந்த திடகாத்திர நிலையில் இருந்தால் தான், சாரதியும் ஒட்ட முடியும்! திறமையைக் காட்ட முடியும் புகழையும் வெற்றியையும் ஈட்ட முடியும்: இல்லையேல், வாடகைக் குதிரை வண்டியைப்போல தான் வாழ்க்கை அமையும். அதில் என்ன விசேஷம் என்ருல், வாடகை வண்டியில் ஏறி உட்கார்ந்து பயணம் புறப்பட்டர்ல், போய்ச் சேருகின்ற இடத்திற்குப் போய் சேருவோமா என்ற சந்தேகம். அவநம்பிக்கை, குதிரையின் நிலையைப் பார்த்து பயம், மன உலேச்சல், கவலே! இத்தகைய பயணம் இனிமையாகத்தான் இருக்குமா? இன்பந்தான் பயக்குமா சென்ருலும் செல்லுகின்ற காரியந் தர்ன் பலிக்குமா! அப்படி ஒரு நிலை நமக்கு ஏன் வரவேண்டும்? எப்பொழுதும் அடிப்படையும்,அஸ்திவாரமும் நன்ருக இருந்தால்தான், எல்லாமே நன்முக அமையும். நலமாக முடியும்: - - வீடுகட்ட பலமான அஸ்திவாரம் போட்டுத்தான் சுவர் எழுப்புகிள்ருர்கள். இல்லையேல் வீடு தாங்காது. அது போலவே, ஒரு வீட்டின் மேல்மாடிக்குப் போவதாக இருந்தாலும், கீழிருந்துதான் மேலே செல்ல வேண்டும். ஒரிருமுறை குறுக்கு வழியாகவும் போகலாம்! ஆனல். குறுக்கு வழிகள் எத்தனை நாளைக்குத்தான் கைகொடுக்கும்: