பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42


ஆனலும்,அறிவு அதனைக் கட்டுப்படுத்துகிறது. சமுதாய இணைப்புக்களையும் வரம்புகளையும் சந்திக்கும் பொழுது, அதன் வழிக்கு சரணடைந்து கொள்கிறது. அதனால்தான் மனித இனம் சமுதாயமாக வாழ முடிகிறது . உடலும் உள்ளமும் இரண்டறக் கலந்தே இருக்கிறது பாலும் சுவையும் போல. உடல் வளர்ந்தால் உள்ளமும் வளர்கிறது. உடல் சிறந்தால் உள்ளமும் சிறக்கிறது. உடல் நலிந்தால் மெலிந்தால், உள்ளமும் நலிகிறது மெலிகிறது. உள்ளம் சிறந்தால் உடலும் சிறக்கிறது. உள்ளம் தைந்தால் உடலும் நைந்து போகிறது. ஆனால், உடல் அழியும் பொழுது உள்ளமும் அழிந்து போகிறதே! என்ருலும், உடல் அழியும் வரை உள்ளம் அழிவதில்லை. எனவே, உடலை வைத்தே உள்ளம் அமைகிறது என்றே நாம் அறிந்துகொள்ளலாம். அதையே அழகாகச் சொல்வார் கள்-உடல் என்ற கோயிலிலே உள்ளம் என்ற தெய்வத் தன்மை குடிகொண்டிருக்கிறது என்பதாக. கோயிலின் மகிமை அதிலுள்ள தெய்வத்தன்மையைப் பொறுத்தே அமைகின்றது. கோயில் உட்புறத் துய்மைக்கு வெளிப்புறத்துாய்மையும் கட்டாயம் உதவும், வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை போல உடல் இருந் தால் அது எப்படி இருக்கும்? வெள்ளை ஆடையணிவதால் மட்டும் உடல் தூய்மை பெற்று விடாது. அழுக்கு நீங்கிய உடல், அழுகல் சதை நீங்கிய வலிவான உடல்தான் துாய்மையும் தெய்வத்தன்மையும் நிறைந்த தேகமாக அமையும். - இல்லையேல் கல்லறைக்குள்ளே காணுகின்ற காட்சி தான். தூசியும் தும்பும் நிறைந்த கோயிலின் வெளிப்புறத்