பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43


தோற்றம், உட்புறத்தையும் நாசமாக்கிவிடுமே! அதனல் தான் உள்ளும் புறமும் தூய்மையாக இருக்க வேண்டும் என்று பெரியோர்கள் அறிவுரை கூறுகின்ருர்கள். உடல் சிறந்த கோயிலாக பொலிவு பெற வேண்டும். அதற்கேற்ற தகுதியை அடைய வேண்டும். உள்ளே வாழும் தெய்வத்தன்மை சிறந்து விளங்க வேண்டும். அதற்கேற்ற இனிய நிலையை உடல் அடைய வேண்டும். f நமது உடலை இந்த உலகத்தோடு அறிஞர்கள் ஒப்பிட்டுக் கூறுவார்கள். நிலம் நீர் காற்று நெருப்பு இவற்ருல் ஆகியே உலகம் இயங்குகிறது என்று. சதையும் எலும்பும் கலந்த உடல் நிலமாக, அயைாகி ஒடுகின்ற உணர்ச்சிகள் நீராக, விரைவாக இயங்கும் எண்ணங்கள் அலகின்ற காற்ருக, தெய்வத்தன்மை தீபாக இயங்குகிறது. எலும்பும் சதையும் உருவர்க்கிய உடல் ஐம்புலன்கள் வழியே நடை போடுவதன்றி, உணரவும். காணவும், கேட்க வும், நுகரவும், ருசிக்கவும் என்ற முறையிலேதான் இயங்கி வருகிறது. உணர்ச்சிகளாலே உருவாகியிருக்கிறதோ என்று எண்ணக் கூடிய அளவில்தான், உடலிலிருந்து செயல்களும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. பசியாக, காதலாக, கோபமாக உணர்வுகள் ஏதாவது ஒன்றின் மூலமாக வெளிப் பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. 'மனித உள்ளம் இருக்கிறதே, அது மனித இனத்திற்குக் கிடைத்தற்கரிய ஒரு கருவூலமாகும். உலகில் வேறெந்த உயிரினத்திற்கும் கிடைக்காத ஒரு பெட்டகமாகும். வாழ்கின்ற உயிர்களிலே மேன்மையானவன் என்ற அளவுக்கு மேல்நிலையைத் தருவதுமாகும்.