பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47


மனிதனின் முழு வளர்ச்சி உடலால் மட்டும் வந்து விடுவது இல்லை. உள்ளத்தாலும் வளர்ந்து விடுவதுதான். இரண்டு கைகளில் ஒன்று சிறுத்து ஒன்று பெருத்துத் தோன்றினல் காண்பவர் கைகொட்டி சிரிப்பாரே! அது போலவே, உடலையும் உள்ளத்தையும் ஒரு சேர வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு முதல்நிலை உடலைக் காத்துக் கொள்வதுதான். ஏனெனில், நலிந்து மெலிந்த உடலில் இருந்து நலம் குன்றுகிறது. பலம் குறைகிறது. மகிழ்ச்சி மறைகிறது. அதன்படியே உள்ளமும் செயலற்றுப் போகிறது. அதன் காரணமாக, உடலும் வளர்ச்சியும் கிளர்ச்சியும் இழந்து போகிறது. அது மட்டுமா! நலிந்த உடலில் வீரமும் விவேகமும் வழிமாறிப் போகின்றன. தைரியமும் தன்மான உணர்வும் கூட தடம் புரண்டு அழிகின்றன. நலிந்தவன் உடலில் எழுகின்ற எண்ணம் நைந்து தான் கிடக்கும். நடை முறைக்கு ஒத்துப் போகாத எண்ணங்களே அந்த நசுங்கிப் போன உடலில் முளைத்தெழுகின்றன. அவை, முளையி லேயே கருகியும் போய் விடுகின்றன. ஆகவே, நல்ல உள்ளமும், அதனல் நல்ல எண்ணமும் ஏற்பட அடிப்படையாக, ஆதாரமாக அமைந்து விளங்குவது வளமான உடலே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கண், காது, மூக்கு, நாக்கு, படும் உணர்வு போன்ற ஐம்புலன்களைப் போலவே, மூளையும் ஆருவது புலகை இருந்து வேலை செய்கிறது. உடல் உழைப்பு உடல் திறத் தையும், உடல் நன்னிலையையும் காத்து வளர்கிறது. அது போலவே, மூளையின் உழைப்பு, மன வளர்ச்சியைப் பெருக்கு