பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48


வதாக அமைந்திருக்கிறது. மூளையானது மற்ற உறுப்புக் களைப் போல, வெளியுலகில் இயங்காமல், இதயம் நுரை யீரல் போன்று தெரியாமல் இருந்தே திறம்பட செயல்படு கின்றது. ஆகவே, உடல் நிறைவு என்கிறபொழுது, உடலில் எல்லா உறுப்புக்களும் ஒத்த முறையில் ஒன்ரு ய் பணியாற் றுவதேயாகும். மூளையும் உடலுறுப்புக்களில் ஒன்ருக, அறிவை வளர்க்கும் பணியில் ஈடுபட்டிருக்கின்றது. இதை நோக்கும் இடத்து உடலின் வலிமையும், உள்ளத்தின் வலிமையும், ஒன்று சேர வளர்ந்திருக்கும் நிலைமையையே, திறநிலை என்கிருேம். இத்தகைய திற உடல் நிலையே, நலத்தையும் நீண்ட ஆயுளையும் வழங்குகிறது என்று அறிஞர்கள் விளக்கு கின்ருர்கள். முதுமையில் உடல்நிலை மாறுபடுகிறது. அதன் தொடர் பாக உள்ளத்தின் நிலையும், அறிவு நிலையும் மாறுபடுவதும் இயற்கையே! முதுமையில் உடல் நலங் குறைந்தால், அறிஞர்கள் பெற்ற ஞானமும் தெளிவும் பிறருக்குப் பயன் படாமல் போவதையும் நாம் காண்கிருேம். அதல்ை தான் பண்பட்ட முதியவரைப் பழம் என்கிருேம். பண்படாத அறிவில் மேம்படாத முதியவர்களைக் கிழம் என்கிருேம். முதுமை அடைந்த பின்னும் உடல் நிலையில் பலமாக, அறிவுத் தெளிவில் வளமாக, உள்ளத்தின் உணர்ச்சிகளும் சீராக ஒருவருக்கு உள்ளதென்ருல், அவர்கள் இளமையிலே தங்களது தேகத்தைத் திறம்பட வைத்திருந்தார்கள் என்பதையே குறித்துக் காட்டுகிறது. ஏனெனில், மனித வாழ்க்கையில் இளமை ஒரு பொற் காலமாகத்தான் திகழ்கிறது. கேவலமாகப் பன்றியைப்