பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49


பற்றிப் பேசினலும், பருவத்தில் பன்றியும் பத்துப் பணம் பெறும் என்ற பழமொழியையும் நாம் நினைவு கூர்வது நல்லதாகும். பருவம் என்பது இளமை குலுங்கும் காலம். அதையே வசந்த காலம் என்கிருேம். ஒரு நாட்டின் பொற்காலத்திலே பெருமை பெற்று சிறக்காத கலை, இசை, இலக்கியம், நாகரிகம் எல்லாம், அழிவு காலத்தில் பெருகி வாழ்ந்ததாக சரித்திர சான்றுகள் கிடையாது. அது போலவே, வாழ்க்கையின் பொற்கால மாகிய இளமையில் உடலை வளப்படுத்தி, நலப்படுத்தி வைத்துக் கொள்ளாதவன், முதுமை வந்து முதுகில் குடியேறிய பிறகு என்ன செய்ய முடியும்? குனிந்து நின்று பணிந்து போக வேண்டியதுதான். பின் அங்கே நிமிர்ந்தா நிலைத்து நிற்க முடியும்! o *உழவுக் காலத்தில் உறங்கிக் கிடந்தவன், அறுவடை காலத்தில் அழுது புலம்பிக் கிடக்கத்தான் வேண்டும்’ என்ற முது மொழி போல, இளமையில் சோம்பிக் கிடப்பவன், முதுமையில் தேம்பித்தான் திரி வான். எதிர்காலத்தைப் பற்றி எண்ணி ஏங்கிக் கொண்டு, இன்று பெற இருக்கும் இளமை வளத்தை சேர்க்க நினைக் காமல் போனவன், முதுமையில் தீரா துன்பத்தையே அனுப விக்க நேரிடும். நீ எவ்வளவு சம்பாதிக்கிருய் என்பதில் அல்ல, நீ எவ்வளவு மிச்சப்படுத்துகிருய் என்பதில்தான் உன் சேமிப்பு மிகுந்திருக்கும்’ என்பதுமேல் நாட்டுப் பழமொழி. இளமையில் உடலில் சக்தியை வளர்த்துத் தேக்கிவைத் திருப்பது, பாங்கில் பணத்தை வைப்பு நிதியாக (Fixed Deposit) போடுவது போ லாகும். அந்த வைப்பு நிதியின் பெற்ருேர்களாக விளங்குவது உடலும் உள்ளமும் தான். வாழ்க்கை எனும் வயலுக்கு, வளம் எனும் வாய்க்கால் வழியாக இன்பம் எனும் நீரைக் கொண்டு வர முயலும்