பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55


ஆமாம்! ஒவ்வொரு மனிதனும் பிரச்சினைகளை சந்திக்கவே பழகிக் கொள்ள நேர்ந்தது. வாழ்க்கை வசதிகள் நிம்மதியாக வாழவைக்கவில்லை. இருளைப் பகலாக்கும் ஒளி விளக்குகள், இதயத்தில் நம்பிக்கை ஒளியை, இன்ப ஒளியை ஏற்ற முடியவில்லை. மகிழ்ச்சி தரத்தக்க கேளிக்கை விடுதிகள் திறக்கப்பட்டாலும், இனிமையான மகிழ்ச்சி இதயத்திலே சூழவில்லை. மாருக, வாழ்க்கை மாருத பிரச்சினையாகவே பெருகிவந்தது. தொழில் பெருக்கத்தால், கிராமங்களே விட்டு விட்டு நகரத்தை நோக்கி மக்கள் வரத் தொடங்கினர். நகரத் திலே மக்கள் பெருக்கம் இட நெருக்கம் தானகவே வந்து சூழ்ந்து கொண்டது. எல்லே யோ குறுக்கம். மக்கள் எண்ணிக்கையின் நெருக்கம். ஆட்டுப் பட்டியிலே ஆடுகள் போல. கோழிக் கூட்டிலே கோழிகள் போல, குவிந்து வாழ தலைப்பட்டனர். காற்ருேட்டமில்லாத வாழும் இடம் ஆட்கள் புழக்கம் பெருகப் பெருக, இடநெருக்கம் அதிகமாக ஆக, ஒரே இடத்தில் குடும்பமானது எல்லா வேலைகளையும் செய்கின்ற நிலைமைக்குக் கொண்டு வந்தது. கழிவு நீர்த் தேக்கம் வீதி வழிக் குப்பையாகத் தேக்கம், சேறும் சகதியுமாக சுற்றுப்புறம். கொசு ஈக்கள் தொல்லை. ஒயாது உழைப்பவர்களின் வாழ்க்கை ஓயாத தொல்லேக்குள்ளே ஊஞ்சலாடியது. வாழத் துடிக்கும் ஏழைகளுக்கு வறுமையின் விளையாட்டு. உடல் உழைப்பு உறக்கத்தைத் தந்தது. என்ரு லும் அசுத்தமான சுற்றுப் புறம் நோயைக் கொடுத்து நோகடித்து வந்தது. இதற்கு மாருக, செல்வர்கள் வாழ்ந்தனர். வசதியுடன் வாழ்ந்தனர். இவ்வாறு நாகரிகத்தின் நாடகம் நடை