பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56


பெற்றது. செல்வம் உள்ளவர். இல்லாதவர் என்று இரண்டு வர்க்கமாக மானிட இனம் பிரிந்தது, அல்ல அல்ல, பிளந்தது. -- உழைப்பாளிகள் ஒய்வின்றி உழைத்தனர். செல்வந்: தர்கள் உழைக்காது இன்பம் பெற்றனர். இந்த ஏற்றத் தாழ்வுதான் சமுதாயச் சீரழிவுக்கு சகாயப் பாதையாக மாறியது. தேவையைத் தீர்க்கத் திண்டாடுபவன் ஒருபுறம். தேவை என்ருல் என்ன என்று தேடித் திரியும் செல்வந்தன் மறுபுறம். உழைத்தவன் தீண்டத் தகாதவன் என்று ஏளனக் கண்ணுேடு பார்க்கும் நிலையும் ஏற்பட்டது. உழைக்கத் தெரியாதவர்கள், உடலால் உழைக்க முடியாதவர்கள் என்று மாற்றம் பெற்ற சமுதாயம், மெல்ல மெல்ல சேர இயலாத இரு துருவங்களாக பிரிந்து சென்றது. உழைப்பாளிகள் பொருளால் இல்லையென்ருலும், உடலால் நலிவில்லாத, நோயில்லாத வாழ்க்கையை வாழத் தலைப்பட்டனர். உழைக்காதவர்கள், உத்தியோகம் பார்ப் பவர்கள், பொருளால் வசதியுடன் வாழ்ந்தாலும், உடலால் பாதிக்கப்பட்ட நிலையில்தான் வாழவேண்டி வந்தது. நாகரிகத்தின் நாடகம் வாழ்க்கை மேடையில் வெற்றிகர. J. ** הר = r*r 4. o - - o மாகவே அரங்கேறிக் கொண்டு வந்தது.