பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு ன் னு ைர வரலாற்றுக்கும் முற்பட்டதாக வடிவம் எடுத்து விளங்குகின்ற விளையாட்டுக்கள், வாழ்க்கையின் வழிகாட்டி களாக விளங்குகின்றன. நாடுகள் வேறுபட்டாலும், நாகரிகம் மாறுபட்டாலும், பேசும் மொழி பேதம் உற்ருலும், மக்களிடையே தாழ்வு உயர்வு கற்பித்தாலும், அனைவருக்கும் ஒன்முக, நன்ருக, குன்ருக விளங்கிக் குலம் காக்கும் பெருமை பெற்றுத் திகழ்வது விளையாட்டுக்க ளேயாகும். பழிப்பதற்கு அஞ்சாமல், விளையாட்டுக்களைப் பற்றி புறம் பேசி, வெறுத்தொதுக்கும் விதண்டாவாதக்காரர்கள் நாட்டிலே நிறைய பேர்கள் இருக்கின்ருர்கள். அவர்கள் தங்களுக்கே அநீதி இழைத்துக் கொள்வது போதாதென்று, அடுத்தவர்களையும் விளையாட்டுக்குப் போகாதீர்கள் என்று தடுத்தும் கெடுத்தும் தடுமாறித் திரிகின்ருர்கள்.