பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 விளையாட்டுக்களைப் பற்றிய உண்மை நிலை புரியாமல், விளுன வதந்திகளைப் பரப்பிய காரணத்தால் தான், நமது நாட்டில் விளையாட்டுக்கள் மக்களிடையே அதிகமாக வேண்டிய அளவு பரவ இயலாமற் போயின. எதற்கும் குறை கண்டு பிடிப்பதும், குற்றம் சொல்வதும், ஏறுக்குமாருகப் பேசுவதும் ஒரு சிலருக்கு இயல்புதான். அவர்கள் அரை வேக்காடுகள் போன்ற வர்கள். நலமற்ற உடலை வைத்துக் கொண்டு நடமாடித் திரியும் மனித ஜடங்கள். அவர்கள் மாற்றி வைத்த மனங்களைத்தான், இன்று மாற்றிட நாடே முயல்கிறது. வளரும் தலைமுறைக்கு வாழ்வளித்து வழிகாட்டும் விளையாட்டுக்களின் விழுமிய பண்புகளை விளக்கும் வண்ணம், இந்த நூல் எழுதப்பெற்றிருக்கிறது. - வாழ்க்கைக்கு எவ்வாறெல்லாம் விளையாட்டுக்கள் உதவுகின்றன என்பதை எளிதாகக் கூறும் வண்ணமாகவே இந்நூல் அமைந்துள்ளது. வாழ்க்கைக்கு உலகம் வேண்டும். விளையாட ஆடுகளம் வேண்டும். வாழ்க்கைக்குக் குறிக்கோள் வேண்டும். விளையாட இலக்கு வேண்டும். இலட்சியத்திற்கு நோக்கம். இலக்குக்குப் பந்து. சமுதாயத்திற்கு சட்டம். விளையாட்டுக்கு விதிமுறைகள். வாழ்வில் முன்னேற வாய்ப்புக்கள். விளையாட்டில் முன்னேற சந்தர்ப்பங்கள்.