பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 எல்லா நிலையிலுமே அறிவும் அனுபவமும் தலே தூக்கி நிற்கின்றன. * இவ்வாரு க. வாழ்க்கையும் விளையாட்டும் ஒன்ருே டொன்று பின்னிப் பிணைந்து, கூடிக் கலந்து, மனித இனத்திற்கு மாபெரும் வாழ்வளிக்க முற்பட்டு விளங்கு வதையே அடிப்படையாகக் கொண்டு, தெளிவாகக் கருத்துக்கள் தெளிக்கப்பட்டிருக்கின்றன. விளையாட்டில் பங்கு பெறும் மனிதர்கள், சிறுவர்கள், இளைஞர்கள் எல்லோருமே விளையாட்டுப் பண்பு மிக்கவர் களாக விளங்க வேண்டும் என்பதை விளையாட்டுலகம் எதிர் பார்க்கிறது.

  • விளையாட்டுப் பண்புகள் தான் எவை என்று வின தொடுக்கலாம், விதிகளை மதித்தல்; விருந்தினர்களாக வரும் எதிர்க்குழுவினரை மரியாதையுடன் வரவேற்றல்; உபசரித்தல்; திறமைகள் எங்கிருந்தாலும் போற்றுதல்; நடுவரின் தீர்ப்பினை மனமார ஏற்றுக் கொள்ளுதல்; கூடி ஒற்றுமையுடன் விளையாடுதல்; குழுவின் புகழுக்காக விளை யாடுதல்;வெற்றியை உண்மை வழியில் ஏற்றுக்கொள்ளுதல்; தோல்வியை முனு.முனுக்காமல் ஏற்றுக் கொள்ளுதல். போன்றவை தான்.

இவைகள் தான் வாழ்க்கைப் பண்புகளாகவும் விளங்கு கின்றன. கற்போர் மனதில் இக் குனங்கள் கலந்து கொள்ளு மால்ை, வளர்ந்து கொள்ளுமானல், என் முயற்சி பலன் அடைந்தது என்றே மகிழ்வேன்