பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58


என்னதான் அவன் செய்தாலும் உணவில்லாமல் வாழ்ந்திட முடியுமா? உணவினைப் பெருக்குவதற்காக அவன் உருவாக்கிய நாகரிகம், அவனது உழைப்பை கெடுத்துவிட்டது. உழைப்பு மனிதனுக்குரியது. அது மனிதனுக்கே சொந்தமானது. விலங்குகள் உழைக்கின்றன. எந்திரங்கள் துரித கதியில் இயங்குகின்றன இயக்கப்படுகின்றன. ஆனல் விலங்குகளுக்கும் எந்திரங்களுக்கும் இப்படித்தான் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் மாற்றியமைக்க வேண்டும் என்ற நிலையில்லை. ஏனெனில் அவை சிந்திக்கவில்லை. மிருகங்கள் வயிற்றுப் பசிக்காக உழைக்கின்றன. மனிதனே பசிக்காக மட்டுமல்லாமல், வாழ்க்கை முழுவதற் கும் வேண்டும், மீதப்படுத்த வேண்டும் என்ற குறிக் கோளுடன் உழைக்கிருன், அவன் அப்படி உழைக்கத்தான் வேண்டும். இல்லையேல் பட்டினி கிடக்கவேண்டும் என்பது உலக நியதி. இப்படி ஒரு பயங்கரமான சூழ்நிலை இங்கே! இப்படியாக, மனித வாழ்க்கை இயக்கமாகத் தொடங்கி பிறகு பெரும்போராட்டக்களமாக மாறிவிட்டது. உடலால் உழைத்தகாலம் மாறி, ஒடும் எந்திரங்களே இயக்கும் கோலத் தில் வாழ்வு முறை மாறி விட்டது. உழைக்கும் ஏழைகள் வளமாக மாறிக்கொண்டனர். உழைக்க மறுத்த உல்லாச வாசிகள் உடலால் நைந்தனர். ஏழையின் கவலை உணவுக்குப் பிறகு மறைகிறது. இதயம் திருப்தியடைகிறது. எண்ணத்தில் எழுச்சி ஏற்படு கிறது. பாட்டும் கூத்தும் பரவசமுமாகப் பொழுது கழிகின்றது. உழைப்பின் களேப்பு உறக்கத்தை அழைக் கிறது. உடலே அணைக்கிறது. இரவும் இனிமையான ஒய்வும் உறக்கமாக தொடர்ந்து பெற்றுக்கொள்ள. அவன் மறுநாள் விழிக்கும்பொழுது, மலர்ச்சி பெற்றவகை விழிக்கிருன். உழைக்கிருன்.