பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59


பணத்தை சேர்த்து விட்டவர்கள், படாடோப வாழ்க்கை வாழ்பவர்கள், வாழ்க்கையை அனுபவித்துவிட வேண்டும் என்று துடிப்பவர்கள் நிலைமை எப்படி ஆகிறது? வாழ்க்கையின் அடிப்படையான உழைப்பை மறந்து விட்ட வர்கள் அவர்கள். உடலுக்கு உழைப்பு தேவையற்றது, என்று நினைத்து மகிழ்பவர்கள். ஆகவே, உடலையும் ஒரு வேலைக்காரகை எண்ணி, உடலைக் கசக்கி இன்பம் அனுபவித்து விட்டு, உதாசீனப்படுத்துகின்றதையே தொழிலாகக்கொண்டு விட்டார்கள். மரம் ஒன்று இருக்கிறது. நல்ல நிழல் தருகிறது. பசிக்குப் பழங்கள் தருகிறது. பார்வைக்கு அலங்காரமாகவும் இருக் கிறது. அதைப் பாதுகாத்து, பலனை அனுபவிப்பவனே மனிதன். புத்தியுள்ளவன். மரத்தை வெட்டி வெட்டி சிதைத்து விட்டு. எல்லா பலனும் கிடைக்கும் என்று எதிர் பார்த்துக் கிடப்பவன், ஏங்கித் தொலைப்பவன் எத்தகைய முட்டாள் என்று நம்மால் யூகிக்க முடிகிறதல்லவா! வசதி வந்தவர்கள் இப்படித்தான் வாழ்ந்து கொள்கிருர்கள். உடல் என்னும் கற்பகத்தருவை உதாசினம் செய்வ துடன், நலிந்து போக வைக்கின்ற காரியங்களை யெல்லாம் நாளெல்லாம் செய்து, உரிய பலனே அனுபவித்து விட்டு, அதைப் பாதுகாக்க வேண்டும், பராமரிக்க வேண்டும் என் கின்ற அடிப்படை நினைவு கூட இல்லாமல் ஆட்டம் போடு கின்றனர். அதனுல்தான் இருபதில் உடலைக் காவாத ஒருவன் எழுபதில் எப்படி பழமாக இருக்க முடியும், அவன் கிழமாகத் தான் இருக்க முடியும் என்கிரு.ர்கள் அறிஞர்கள். விவரம் புரியாத கிளி ஒன்று இலவு பழுக்கும் என்று. காத்துக் கிடந்ததாகப் பழமொழி கூறுவார்கள். விவரம் புரியாத மனிதர்கள் பலர், தங்கள் உடலைக் காக்காமலேயே