பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60


உலக இன்பத்தைத் துய்த்துக் கொள்ளலாம் என்றே துடிக் கின்ருர்கள். ஆசையின் கைப்பாவையான மனிதர்கள், அதற். கேற்பவே ஆடிக் கொண்டிருக்கின்ருர்கள். ஆனல் உடலை நினைத்தார்கள் இல்லை. காலையில் குளிப்போம் என்ற ஓர் கடமை; உண்ணுவோம் என்றவொரு நினைப்பு: உடுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஒரு கட்டாயம். இத்துடன் அவர்கள் உடலைப் பற்றி நினைக்கின்ற, சிந்திக்கின்ற நேரம் முடிந்து விட்டது. பின்னர், எந்த நேரத்தில் எதைச் செய்தால் லாபம் கிடைக்கும் என்ற தந்திர நினைவு: யாரைப்பிடித்தால் காரியம் நடக்கும் என்ற சிந்தனை நரி ஒட்டம்; எவ்வளவு கிடைக்கும், எப்படி கிடைக்கும் என்று தான் எண்ணி எண்ணி, அதை செயலாக்க உடலை விரட்டிக் கொண்டு திரிகிருர்களே ஒழிய, ஒய்வு தருவோம், உடலைக் காப்போம் என்று நோய் வருவதற்கு முன் நினைத்துப் பார்ப்பவர்கள் எத்தனை பேர்? எதையாவது செய்து விட்டு இடர்ப்படுவதும், செய்யாமலே விட்டு விட்டேமோ என்று துயர்படுவதும், அவசரப்படுவதும், இன்று நாகரிக நிலையின் முற்றிய நிலைமையாகிவிட்டது. பழம் அறுக்க வந்த கத்தி, கையைப் பதம் பார்த்து விட்டது. அதல்ை உடலின் நிலை தாழ்ந்தது மட்டுமல்ல, உலகத் தார் நிலையும் நலிந்தல்லவா போய்விட்டது! வெயிலில் வெண்ணெயாக, காற்றில்லா இடத்தில் புழுங்கும் கனியாக வெதும்பிப் போகும் நிலைக்கு உடல் ஆளாகியது. வண்ணம் மாறியது. வளம் மாறியது. நோய்