பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61


வாழும் வீடாக, உலர்ந்த கூடாக உடல் தோற்றம் கொண்டது. இந்தக் காலத்தில் எத்தனை மருத்துவ விடுதிகள் புதிது புதிதாகத் திறக்கப்பட்டாலும், அங்கெல்லாம் நோயாளிகள் கூட்டம். மருந்தும் கையுமாக முகத்திலே வாட்டம். நான்கு அடி கூட நடக்க முடியாமல் துடிக்கும் கால்கள். இருக் கட்டுமா அமரட்டுமா என்று இளைத்துக் களைத்த உடல்கள்: இது மட்டுமா! பெருத்த தொந்தியில் பெரு மூச்சு நடை, குச்சிக் கால் களால் துணிகளைப் போர்த்திய கொடி போன்ற தோற்றம்; மேலே பார்த்தால் மயக்கம், கீழே பார்த்தால் தலை சுற்றல் என்ற புலம்பல்; என்னமோ செய்கிறதே என்ற வேதனை புராணம்! மனிதர்கள் எண்ணிக்கை எத்தனையோ; அத்தனை வகைகள் நோய்க் கூட்டம்! வைத்தியரை நம்பியே வாழ்க் கைப் பயணத்தைத் தொடர்கின்ற மனிதர்கள் கூட்டம் இன்று சமுதாயத்தட்டிலே நிரம்பி வழிகிறது.

  • மருந்து சாப்பிடுகிறேன், உணவைக்குறைத்து பத்தியத் தில் (Diet) இருக்கிறேன்’ என்பதிலே பெருமையடித்துக் கொள்வோரையும் கெளரவிக்கின்ற காலமாக அல்லவா இந்தக் காலம் இறங்கி வந்திருக்கிறது!

அறியாமையால் அலை புரண்டு வரும் தொற்று நோய்களைப்பற்றி இங்கு கூறவில்லை. அறிந்து கொண்டே தம் உடலுக்குத் தீங்கிழைத்துக் கொள்பவர்களைப் பற்றித் தான் இங்கு பேசுகிருேம்! உடலை சுமையாக எண்ணி வாழும் மக்களால் உலகத் திற்கு என்ன பயன்? ஒரு குருடன் இன்னெரு குருடனுக்கு