பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62


எப்படி வழிகாட்ட முடியும்? புதை சேற்றிலே கிடந்துழலும் ஒருவன், பக்கத்தில் புதைந்து கொண்டிருக்கும் இன்னொரு வினை எப்படி மீட்க முடியும்? இந்த நிலையில் சமுதாயம் மாறினால், மனித இனத்தின் கதிதான் என்ன? பிறவியின் பயன் பெருமையுடன் வாழ்வது மட்டுமல்ல! பிறருக்கும் உதவுவது! தாயகத்திற்குத் தொண்டு செய்வது! தியாக மனப்பாங்குடன் வாழ்வது தானே! முனகலுடன் திணறிவாழும் ஒருவன், இதனைச் செய்யமுடியுமா? வாழ்க்கை பந்தயம்’ என்பது இங்கு நடக்கின்ற எல்லா போட்டிகளையும் விட கடினமான ஒரு போட்டியாகும், இதில் கலந்து கொண்டு வெற்றி பெற்று, மகிழ்ச்சி என்ற பரிசினைத் தான் பெற முயல வேண்டும். மகிழ்ச்சிப் பரிசு பெற வேண்டுமானல், அதற்கு அடிப் படைத் தேவைகள் இவைகள்தான். வலிமையான உடல், தொடர்ந்து பணியாற்றும் சக்தி. துன்பங்களை சகித்துக் கொள்ளும் மனப் பக்குவம். தோல்வியைத் தாங்கிக் கொள்ளும் மனே சக்தி. போட்டியிலே எளிதாக, இனி தாக சுகமாக இயங்க, நல்ல உடலே நித்தம், நித்தம் இவற்றிணை வழங்குகிறது. ஆகவே, இத்தனை தேவைகளையும் எளிதாக ஒன்றே ஒன்றுதான் இன்று தேடித் தருகிறது. சேர்த்து வைக்கிறது. அதுதான் விளையாட்டு. நீரில் நீந்த வேண்டுமானல், முதலில் நீரில் மிதக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அது போலவே, வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு எதிர் நீச்சல் போல, விளையாட்டே மக்களைப் பதப்படுத்தி ஆயத்தப்படுத்துகிறது. எத்தனை காலம் இந்த உலகத்தில் வாழ்கின்ருேம் என்பதில் பெருமையில்லே. இவ்வுலகில் வாழ்கின்ற வரை