பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63


எப்படி வாழ்கிருேம், என்பதில்தான் பெருமையிருக்கிறது. எவ்வளவு என்பதைவிட எவ்வாறு என்ற பதிலில் தான் வாழ்க்கையின் பெருமை இருப்பதால், அதனை உருவாக்கும் உன்னத சக்தியை விளையாட்டுக்களே வழங்கி உதவி புரிகின்றன. ஆகவே, நோயிலா வாழ்வுக்கும், நெருக்கும் பிரச்சினை களைத் தவிர்த்து மகிழும் வாழ்வுக்கும் விளையாட்டுக்களே விடுதலை உணர்வினைத் தந்து வழிகாட்டுகின்றன என்பதை நாம் உணரும்பொழுதே, உன்னதமான ஓர் ஆனந்தநிலையை எய்திடும் உணர்வினையும் பெறுகிருேம் என்பதால்தான் விளையாட்டை வேண்டும் என்கிருேம்.